Published:Updated:

தர்மபுரி கலவரம்: டாக்டர் ராமதாஸ் மீது போலீசில் புகார்!

விகடன் விமர்சனக்குழு
தர்மபுரி கலவரம்: டாக்டர் ராமதாஸ் மீது போலீசில் புகார்!
தர்மபுரி கலவரம்: டாக்டர் ராமதாஸ் மீது போலீசில் புகார்!
தர்மபுரி கலவரம்: டாக்டர் ராமதாஸ் மீது போலீசில் புகார்!

சென்னை: தர்மபுரி கலவரம் தொடர்பாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மீது  காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
 
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ரஜினிகாந்த், 20 வழக்கறிஞர்களுடன் சென்னை  போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று புகார் மனு ஒன்றை அளித்தனர்.

அதில்,"தர்மபுரியில் நடந்த வன்முறை சம்பவங்களையொட்டி கடந்த 17-ம் தேதி பாமக  நிறுவனர் ராமதாஸ் வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு எம்.எல்.ஏ. ஆகியோர்  நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.
 
ராமதாஸ் அளித்த பேட்டியில் தலித் மக்கள் வாழும் பகுதிகளில் பிற சமுதாயத்தை  சேர்ந்த பெண்களுக்கும்,மாணவிகளுக்கும் பாதுகாப்பு இல்லை என்று கூறி உள்ளார்.
 

##~~##
இந்த கருத்து தலித் மக்களுக்கு எதிராக பிற சமுதாயத்தை தூண்டி விடும் வகையில்  உள்ளது.எனவே அவர் மீது வன் கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க  வேண்டும்.
இதே போல மாமல்லபுரத்தில் நடந்த விழாவில் காடுவெட்டி குரு தலித்களுக்கு எதிராக  வன்முறையை தூண்டும் வகையில் பேசி உள்ளார்.எனவே டாக்டர் ராமதாஸ்,  காடுவெட்டி குரு ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்”என்று கூறப்பட்டுள்ளது.