Published:Updated:

2015 டாப் 10 பிரச்னைகள் - செயல்படாத அரசு நிர்வாகம்

2015 டாப் 10 பிரச்னைகள் - செயல்படாத அரசு நிர்வாகம்

2015-ம் ஆண்டு தமிழகத்தை ஆட்டிப்படைத்த 10 தலையாயப் பிரச்னைகளைப் பற்றி பல்வேறு துறை சார்ந்த நிபுணர்கள் அலசுகிறார்கள்...

2015 டாப் 10 பிரச்னைகள் - செயல்படாத அரசு நிர்வாகம்

`வரலாறு காணாத அளவுக்குப் பெய்த மழை சென்னையை மூழ்கடித்துவிட்டது’ என்று மழை, வெள்ளச் சேதத்துக்கு காரணத்தைக் கண்டு பிடித்திருக்கிறது அரசு. ஆனால், மாநில அரசின் நிர்வாகம், ‘வரலாறு காணாத அளவில் செயலற்று இருக்கிறது’ என்பதே உண்மை. பெருமழை பெய்யும் என்பதை வானிலை ஆய்வாளர்கள் முன்பே எச்சரித் திருந்தும் மீட்பு, நிவாரணப் பணிகளுக்குக்கூட இந்த அரசு நிர்வாகம் தயாராக இல்லை. டாஸ்மாக் கடைகளைக் காப்பாற்றுவதற்கு ஆயுதங்களோடு களமிறக்கப்பட்ட காவல் துறை, முன்னறிவிப்பு இல்லாமல் திறந்து விடப்பட்ட ஏரி வெள்ளத்தில் இருந்து மக்களைக் காப்பாற்ற வரவில்லை. 

‘ஒரு நல்ல நிர்வாகம் என்பது, தலைமை இல்லாத நிலையிலும் முழுச் செயல் திறனுடன் வழக்கம்போல செயல்பட வேண்டும். ஆனால், மழையே முதலமைச்சர் `ஆணைக்கு’ இணங்கப் பெய்வதாக ஒரு மாவட்ட ஆட்சியர் உளறிக்கொட்டும் இந்தத் திருநாட்டில், அரசுத் துறைகளின், அதிகாரி களின் லட்சணம் எப்படி ஆக்கபூர்வமாக இருந்துவிட முடியும்?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
2015 டாப் 10 பிரச்னைகள் - செயல்படாத அரசு நிர்வாகம்

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப் பட்டு ஜெயலலிதா சிறையில் இருந்தபோது தமிழ்நாடே இழவு வீடாக மாற்றப்பட்டது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் கோயில், கோயிலாகச் சென்று ஒப்பாரி வைத்தனர். அனைத்து அரசுத் துறைகளும் செயலற்றுக்கிடந்தன. ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தண்டனையால் ஆத்திரம் அடைந்த அ.தி.மு.க-வினர், தமிழ்நாட்டை வன்முறைப் பிரதேசமாக மாற்றினார்கள். அந்த வன்முறைகளுக்கு காவல் துறை பாதுகாப்பு வழங்கியது. அரசுப் பேருந்துகள், மெட்ரோ ரயில், ஏராளமான கட்டடங்கள் என நூற்றுக்கணக்கான அரசுத் திட்டங்கள், ஜெயலலிதாவின் விடுதலைக்காகக் காத்தி ருப்பில் வைக்கப்பட்டன. ‘பன்னீர்செல்வம் தலைமையிலான அரசு சிறப்பாகச் செயல்பட்டால், அது ஜெயலலிதாவுக்கு அவமானம் என்பதால் வேண்டும் என்றே அரசு நிர்வாகம் முடக்கிவைக்கப்பட்டுள்ளது’ என அதிர்ச்சிக் கோணங்களும் சொல்லப்பட்டன.

பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் படுகொலை வழக்கின் விசாரணை அதிகாரி டி.எஸ்.பி விஷணுப்ரியா மர்மமான முறையில் தற்கொலை செய்துகொண்டார். நேர்மையாகச் செயல்பட்ட அவர் மீது காவல் உயர் அதிகாரிகள் செலுத்திய அழுத்தம்தான் அவரது மரணத்துக்குக் காரணம் என்ற வலுவான சர்ச்சை இப்போது வரை நீடிக்கிறது. விஷ்ணுப்ரியாவின் மரணத்தில் உள்ள அநியாயங்களை ஊடகங்களின் முன்னர் உரத்துப் பேசிய கீழக்கரை டி.எஸ்.பி மகேஸ்வரியும் அச்சுறுத்தலுக்கு ஆளாகி மருத்துவமனைக்குள் தஞ்சம் புகுந்தார். நேர்மையின் பக்கம் நிற்போரைத் துன்புறுத்துவதில் மட்டும் சுறுசுறுப்பாகச் செயல்படும் அரசு நிர்வாகம், ‘செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பிவிட்டது. உடனடியாகத் திறக்கவில்லை என்றால் அபாயம்’ என்பதை தலைமைக்கு உணர்த்தி, விரைந்து செயல்படும் திறனற்றதாக இருக்கிறது.

பல்வேறு தரப்பினரும் அறிவித்த வெள்ள நிவாரண நிதிகளை ஒருங்கிணைத்துப் பெறுவதற்கு ஒரு வெளிப்படையான நிர்வாக அமைப்பு இல்லை. அடுத்தவர்கள் தரும் நிவாரணப் பொருட்களை வழிமறித்துப் பிடுங்கி, தன் ஸ்டிக்கரை ஒட்டிக் கொள்வதே நிர்வாகம் என எண்ணிவிட்டார்கள்போல!