Published:Updated:

2015 டாப் 10 பிரச்னைகள் - சமூக ஊடகங்களின் தாக்கம்

2015 டாப் 10 பிரச்னைகள் - சமூக ஊடகங்களின் தாக்கம்

2015-ம் ஆண்டு தமிழகத்தை ஆட்டிப்படைத்த 10 தலையாயப் பிரச்னைகளைப் பற்றி பல்வேறு துறை சார்ந்த நிபுணர்கள் அலசுகிறார்கள்...

சென்னையை மூழ்கடித்த வெள்ளத்தின்போது உணவு, மின்சாரம், போக்குவரத்து, தொலைபேசி போன்றவற்றுக்கு அடுத்து நாம் வெளிப்படையாக விசனப்பட்டது இணைய சேவை இல்லாதுபோனதற்குத்தான். ஏனெனில், இணையமின்மை சமூக ஊடகங்களில் இருந்து நம்மை விலக்கி வைத்துவிட்டது. பெருநகரங்கள், சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்கள் வரை சமூக ஊடகங்களின் வீச்சு கூடியிருக்கிறது.

2015 டாப் 10 பிரச்னைகள் - சமூக ஊடகங்களின் தாக்கம்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

முதலில் வேடிக்கை பார்ப்பவர்களாக  நுழைந்து, பிறகு என்ன நடக்கிறது என்று கவனிப்பவர்களாக, கேள்வி எழுப்புபவர் களாக, பதில் சொல்பவர்களாக மாறுகிறோம். ஒரு நட்பு வட்டமும், நிஜத்துடன் அதிக இடை வெளியுடைய உலகமும் நம் முன் விரிகின்றன. நிறையத் தகவல்களைத் தெரிந்துகொள்கி றோம். ஆனால், எதைத் தெரிந்துகொள்ள வேண்டும், ஒரு செய்தியின் மதிப்பு என்ன என்பதை எல்லாம் நாம் தீர்மானிப்பது இல்லை. அங்கு நிலவும் ட்ரெண்டுக்கு இணங்கிப் போவது ஒன்றுதான் நாம் செய்ய முடிவது.

இங்கு கொந்தளிப்பான எந்தச் செய்திக்கும் ஆயுள், ஒரு நாளோ இரண்டு நாளோதான். ஒரு திரைப்படம் ரிலீஸ் ஆகும் நாளன்று மொத்த சமூக ஊடகமும் அதில்தான் இருக்கும். குழந்தையின் கையில் இருக்கும் பலூனைப் போல மறுநாள் அதன் மீதான வசீகரம் வற்றிவிடும். அதே நாளில் நிகழும் வேறொரு முக்கியப் பிரச்னை நம் பார்வைக்கே வராது.

2015 டாப் 10 பிரச்னைகள் - சமூக ஊடகங்களின் தாக்கம்

தவறான ஒரு பொதுக்கருத்தை நம்ப நேர்கிறது. மீண்டும் மீண்டும் பார்வைக்கு வருவதன் மூலம் அரசியல் கட்சிகள் ஒரு பிராண்டைப்போல நமது மனதில் பதிய வைக்கப்படுகின்றன. அதன் சுவை உணர்ந்த கட்சிகள், சமூக ஊடகங்களைப் பயன்படுத்திக் கொள்கின்றன. அரசுகள் பல நேரங்களில் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றனதான்... ஆனால் அவை மிக எளிதாக தப்பித்துக் கொள்ளவும் சமூக ஊடகங்கள் பயன்படு கின்றன. 

நாம் நிறையத் தனிமைப்படுகிறோம். அதே நேரம் சமூக ஊடகங்களில் கவனிக்கப் படுகிறோம் என்ற கிளுகிளுப்புக்கு உள்ளாகி எல்லாவற்றிலும் கருத்து சொல்ல முனை கிறோம். நாம் நம்மை மனிதனாக உணர வேண்டுமா அல்லது வெறும் ஐ.டி-யாக உணர வேண்டுமா என்ற குழப்பத்தையே பலரால் இன்னும் கடக்க முடியவில்லை. அது பல நேரங்களில் பொறுப்பற்ற தன்மையாக வெளிப்படுகிறது. அதுதான் முதலைகள் வெள்ள நீருக்குள் வந்துவிட்டதாக வதந்தியைப் பரப்புகிறது. பாலியல் வீடியோவை பரவ விட்டு சிலாகித்துக்கொள்கிறது. அடையாள மின்மை தரும் சுதந்திரம், பொறுக்கித்தனத்தை நோக்கி உந்தித் தள்ளுகிறது. பெண்கள் மீதான இந்த ஃபேக் ஐ.டி-களின் வன்முறை கட்டற்றது.

பல செலிப்ரிட்டிகள்கூட கருத்து சொல்லும் அழுத்தத்துக்குப் பலியாகிறார்கள். தமது கருத்தையொட்டி ஒரு கொந்தளிப்பான சூழல் உருவாகிறபோது தவித்துப்போகி றார்கள். ஒரு துறை சார்ந்த நிபுணருக்கு எல்லாவற்றின் மீதும் நிபுணத்துவம் இருக்கும் என்ற பாமரத்தனமான சமூக எதிர்பார்ப்பின் முன்னால் வெளிப்படையாகத் தங்களது அறியாமையை ஒப்புக்கொள்ளவும் முடிவது இல்லை. 

காணாமல்போனதாக அறிவிக்கப்பட்ட கைக்குழந்தை திரும்பக் கிடைத்து, அது கல்லூரிக்குப் போய்க்கொண்டிருந்தாலும் சமூக ஊடகங்களைப் பொறுத்தவரை அது எந்தக் காலத்திலும் காணாமல்போன குழந்தை தான். பகிர்ந்துகொண்டே இருப்பார்கள். அதைக் கண்டுபிடிக்கவே முடியாது. இங்கு எதையும் தொலைக்காமல் இருப்பதே முக்கியம்... நமது சுயம் உள்பட!