Published:Updated:

2015 டாப் 10 பிரச்னைகள் - நியூட்ரினோ, மீத்தேன் திட்டப் போராட்டங்கள்

2015 டாப் 10 பிரச்னைகள் - நியூட்ரினோ, மீத்தேன் திட்டப் போராட்டங்கள்

2015-ம் ஆண்டு தமிழகத்தை ஆட்டிப்படைத்த 10 தலையாயப் பிரச்னைகளைப் பற்றி பல்வேறு துறை சார்ந்த நிபுணர்கள் அலசுகிறார்கள்...

தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள பொட்டிபுரம் என்ற சின்னஞ் சிறிய கிராமத்தின் பெயரை, இன்று உலகமே அறியும். காரணம், நியூட்ரினோ. கண்ணுக்குப் புலப்படாத `நியூட்ரினோ' துகளை ஆய்வுசெய்ய 1,450 கோடி ரூபாய் ஒதுக்கி, ஆரம்பக்கட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவந்த நிலையில், நீதிமன்றத் தடை உத்தரவு காரணமாக இப்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

2015 டாப் 10 பிரச்னைகள் - நியூட்ரினோ, மீத்தேன் திட்டப் போராட்டங்கள்

நியூட்ரினோ என்ற மிகச் சிறிய துகள், ஒவ்வொரு விநாடியும் பல கோடிக்கணக்கில் நம்மைச் சுற்றி ஊடுருவிக்கொண்டிருக்கின்றன. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தத் துகள் குறித்து உலக அளவில் ஆய்வுகள் நடைபெற்றுவருகின்றன. இந்த ஆய்வின் முடிவில், நியூட்ரினோவை கையாளும் சாத்தியத்தைப் பெற்றுவிட்டால், `இந்தப் பிரபஞ்சம் குறித்த புதிய உண்மைகளை அறிந்துகொள்ள முடியும்; இயற்கைப் பேரிடர் களை முன்கூட்டியே கணிக்க வாய்ப்பு ஏற்படும்' என்றெல்லாம் சொல்லப்படுகின்றன.

தேனி மக்களின் கவலை எல்லாம் வேறு. மேற்குத் தொடர்ச்சி மலையில் இரண்டு கி.மீ நீளத்துக்கு சுரங்கம் தோண்டித்தான் திட்டத்தைச் செயல்படுத்தப்போகிறார்கள். இந்தச் சுரங்கப் பணிக்காக, ஆயிரக்கணக் கான லாரிகள் குறுக்கும் நெடுக்குமாக சென்றுவரும். சுரங்கப் பணிக்காகப் பயன் படுத்தப்படும் வெடிகள் ஏற்படுத்தும் சத்தம், எப்போதும் ஒலித்துக்கொண்டே இருக்கும். தூசியும் புழுதியும் எங்கும் நிரம்பியிருக்கும். மேற்குத் தொடர்ச்சி மலையின் பல்லுயிர்ச் சூழல் சீர்கெடும். திட்டத்துக்காக நாள் ஒன்றுக்கு 3 லட்சம் லிட்டர் தண்ணீர் முல்லைப் பெரியாற்றில் இருந்து எடுக்கவிருக் கின்றனர். இந்தத் திட்டத்துக்கு, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பி, அதற்குப் பிறகுதான் பொட்டிபுரம் பகுதிக்கு வந்திருக்கிறார்கள் என்பதையும் நாம் நினைவில்கொள்ள வேண்டும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
2015 டாப் 10 பிரச்னைகள் - நியூட்ரினோ, மீத்தேன் திட்டப் போராட்டங்கள்

நியூட்ரினோ ஒருபக்கம் என்றால், மீத்தேன் மறுபக்கம். காவிரி டெல்டா பகுதியில் 1,64,819 ஏக்கர் பரப்பளவில் பூமிக்கும் கீழே பாறை இடுக்குகளில் படிந்திருக்கும் மீத்தேன் வாயுவை அகழ்ந்து எடுப்பதற்கு, கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்துக்கு அனுமதி தரப்பட்டிருக்கிறது. இதைக்கொண்டு மின்சாரம் தயாரிப்பார் களாம். இதற்காக பல்வேறு பகுதிகளில் ஒரு ஏக்கர், இரண்டு ஏக்கர் என இடம் வாங்கி, ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. பூமிக்கும் கீழே ஆறு கி.மீ தூரத்துக்கு சுரங்கம் அமைத்து, வேதிப்பொருட்கள் அடங்கிய கரைசலை உயர் அழுத்தத்தில் உள்ளே செலுத்தி, பாறையின் பரப்பை உடைத்து, அதன் இடுக்குகளில் படிந்திருக்கும் மீத்தேன் வாயுவை எடுக்க வேண்டும்.

ஆறு கி.மீ அளவுக்கு பூமியைத் தோண்டி உள்ளே உள்ள நிலத்தடி நீரை உறிஞ்சிவிட்டால் என்ன மிஞ்சும்? ஆயிரக்கணக்கான மீத்தேன் கிணறுகள் செயல்படத் தொடங்கினால், செழிப்பான தஞ்சாவூர் பகுதி சுடுகாடாக மாறும். விவசாயிகள், முற்றிலுமாக விவசாயத்தைக் கைவிடுவார்கள். கடும் மக்கள் போராட்டங்களின் விளைவாக, மீத்தேன் திட்டத்துக்கான அனுமதி தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், எப்போது வேண்டுமானாலும் மீண்டும் தொடங்கப்படலாம்.

தெற்கே கூடங்குளம், வடக்கே கவுத்தி வேடியப்பன் மலையில் இரும்புத் தாது, மேற்கே நியூட்ரினோ,கிழக்கே மீத்தேன் வாயு என, தமிழகத்தை நான்கு புறமும் சூழ்ந்திருக் கின்றன பெருந்திட்டங்கள்.

தமிழ்நாடு என்ன, பெருந்திட்டங்களின் சோதனைக்களமா?