Published:Updated:

2015 டாப் 10 பிரச்னைகள் - டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டங்கள்

2015 டாப் 10 பிரச்னைகள் - டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டங்கள்

2015-ம் ஆண்டு தமிழகத்தை ஆட்டிப்படைத்த 10 தலையாயப் பிரச்னைகளைப் பற்றி பல்வேறு துறை சார்ந்த நிபுணர்கள் அலசுகிறார்கள்...

சென்னையும் கடலூரும் வெள்ளத் தில் சிக்கி உருக்குலைந்த நாட் களில், குடிக்க தண்ணீர் இல்லை; உண்ண உணவு இல்லை; போக்குவரத்து வசதி இல்லை. ஆனால், ஊர் எங்கும் டாஸ்மாக் வியாபாரம் மட்டும் அமோகமாக நடந்துகொண்டிருந்தது. மக்கள் பாலுக்காகக் கையேந்தி நிற்க, அரசோ மதுபான விற்பனையை முடுக்கிவிட்டிருந்தது.

2015 டாப் 10 பிரச்னைகள் - டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டங்கள்

மதுவிலக்கு பற்றி பேசிப் பேசி இறந்து போன சசிபெருமாள் மரணம் நமக்குச் சொல்வது ஒன்றைத்தான்... ‘சட்டத்தின்படி அமைதியான வழியில் போராடி டாஸ்மாக்கை மூட முடியாது’.  ஏனெனில், டாஸ்மாக் இயங்குவதே சட்டப்படிதான். `கன்னியா குமரி மாவட்டம் உண்ணா மலையார் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை மூட வேண்டும்’ என்ற உயர் நீதிமன்றத்தின் உத்தரவை, ஒன்றரை ஆண்டு காலம் அரசு கண்டுகொள்ளவே இல்லை. அதனால்தான் மக்கள் திரண்டு தீக்குளிக்கும் போராட்டம் அறிவித்தார்கள். அதில் கலந்துகொண்ட சசிபெருமாள், அங்கு இருந்த காவல் துறை அதிகாரிகளிடம், ‘நான் பலமுறை போராட்டம் நடத்தியும் நீங்கள் கண்டு கொள்ளவில்லை. எனக்கு வேறு வழி இல்லை’ என நொந்துபோய்ச் சொல்லி விட்டுத்தான் செல்போன் டவர் கோபுரம் மீது ஏறினார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
2015 டாப் 10 பிரச்னைகள் - டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டங்கள்

சசிபெருமாள் மரணத்தையொட்டி தமிழ் நாடு முழுவதும் தன்னெழுச்சிப் போராட் டங்கள் நிகழ்ந்தன. கலிங்கப்பட்டியில் துப்பாக்கிச் சூடு, சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் போராட்டம் என தமிழ்நாடு முழுக்க மதுவுக்கு எதிராக மாணவர்களும் பொதுமக்களும் திரண்டனர். இந்த எதிர்ப்பின் தொடர்ச்சிதான் கோவன் பாடிய ‘மூடு டாஸ்மாக்கை மூடு...’ பாடல். ‘குடி கெடுக்கும் அரசிடம் கெஞ்சியது போதும். இனிமேல் எங்கள் ஊரில் டாஸ்மாக் கடை கிடையாது. எவன் வருவான் பார்ப்போம்’ என்ற வரிகள் தமிழ் நாட்டின் வீதிகள்தோறும் ஒலித்தன. அந்தப் பாடலைப் பாடியதற்காக ம.க.இ.க பிரசாரப் பாடகர் கோவனை, நள்ளிரவில் கைது செய்தது தமிழ்நாடு போலீஸ். தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கையை அனைத்து வகையிலும் சீரழிக்கும் டாஸ்மாக்கை எதிர்த்துப் பாடியதற்காக, கோவன் மீது தேசத்துரோக வழக்கு பாய்ந்தது. இந்தப் பிரிவின் கீழ் ஆயுள் தண்டனைகூட வழங்க முடியும். ஆங்கிலேய ஆட்சியில் சுதந்திரப் போராட் டத்தில் ஈடுபட்டவர்கள் மீதுதான் இது போன்ற வழக்குகள் பாய்ந்தன.

பள்ளி, கல்லூரி மாணவர் - மாணவிகள் பாதிக்கப்படுவதைக் கண்டும், விதவைகள் பெருகியது கண்டும் மற்ற கட்சிகள் எல்லாம் தங்கள் நிலைப்பாட்டை ‘ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக்கை மூடுவோம்’ என மாற்றி விட்டார்கள். ஆனால், ஆளும் அ.தி.மு.க அரசோ,  `படிப்படியாக மூடுகிறோம்’ எனக்கூட சொல்ல முன்வரவில்லை. இந்த நிலைப்பாடு ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்துக்கும் எதிரானது.

`போலீஸும் போதையும் இருந்தால் போதும்... எல்லாவற்றையும் மாற்றிவிடலாம்; மற்ற பிரச்னைகளைப் பின்னுக்குத் தள்ளிவிடலாம்’ என தமிழ்நாடு அரசு நினைக் கிறது. டாஸ்மாக் வருமானம் 26 ஆயிரம் கோடி ரூபாய் என்றால், சாராய அதிபர் களுக்கு லாபம் 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகம். அவர்கள்தான் இத்தனை அடாவடிகளுக்கும் பின்னால் இருக்கி றார்கள். அரசு, அவர்கள் பக்கம் இருக்கிறது. இவர்களிடம் மனு போட்டு தீர்வைக் கண்டடைய முடியுமா... அது சாத்தியமா? மக்கள்நலன் பற்றி பேசுவதற்கான தார்மீகத் தகுதியை இந்த அரசு இழந்துவிட்டது!