Published:Updated:

2015 டாப் 10 பிரச்னைகள் - மழை வெள்ளம் - இயற்கைச் சீற்றம்

2015 டாப் 10 பிரச்னைகள் - மழை வெள்ளம் - இயற்கைச் சீற்றம்

2015-ம் ஆண்டு தமிழகத்தை ஆட்டிப்படைத்த 10 தலையாயப் பிரச்னைகளைப் பற்றி பல்வேறு துறை சார்ந்த நிபுணர்கள் அலசுகிறார்கள்...

மழை வெள்ளத்தால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நகரங்கள் சென்னை, கடலூர், தூத்துக்குடி ஆகியவை. இந்த மூன்றும் தொழில் வளர்ச்சியினால் சூழலைச் சீரழித்த நகரங்கள். பிற பகுதி களிலும் வெள்ளம் பாய்ந்தது என்றாலும், இந்த மூன்று நகரங்கள் மட்டும்தான் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகின.

2015 டாப் 10 பிரச்னைகள் - மழை வெள்ளம் - இயற்கைச் சீற்றம்

`புவி வெப்பமாதல்’ எனும் கருத்து, ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே பரவலாகத் தொடங்கிவிட்டது. இதன்படி கடலில் மூழ்கப்போகும் நகரங்களின் பட்டியலில் சென்னையும் உள்ளது.  இதுபோன்ற அழிவுகளுக்கு அடிப்படையே, நவீனத் தொழில்நுட்பங்களின் கட்டற்ற வளர்ச்சியும், மனிதர்களின் சுயநல வெறிகொண்ட வாழ்க்கைமுறைகளும்தான். இந்த உண்மைகள் மக்களிடம் பரப்பப்பட்டால் உலகைக் கொள்ளையடிக்கும் நிறுவனங்களும், அவற்றுக்குத் துணை நிற்கும் அரசுகளும், மக்களால் ஒதுக்கித்தள்ளப்படும் நிலை உருவாகும். இதனால்தான் பூமியில் உருவாகும் ஆபத்தான மாற்றங்கள் பற்றிய உண்மைச் செய்திகள் மறைக்கப்படுகின்றன.

நீர்நிலைகளை ஆக்கிரமிப்பதில் சாதி, மத, கட்சி, வர்க்கப் பேத வித்தியாசம் இல்லாமல் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படு கிறார்கள். பெருநிறுவனங்கள் சட்டங்களை வளைக்கின்றன. குடிசைவாசிகள் தமது சாதி அடையாளங்களுடன் ஆக்கிரமிக்கின்றனர் அல்லது வாக்கு வங்கி அரசியல்வாதிகளின் தேர்தல் தேவைகளை நிறைவேற்றிச் செயல் படுகின்றனர்.

இந்த மழைக் காலத்தில் நாங்கள் மேற்கொண்ட ஆய்வில், `சென்னையில் பெய்த மழைநீர் குடிப்பதற்குத் தகுதியற்றது’ என்ற ஆய்வு அறிக்கை கிடைத்துள்ளது. மழைநீரை ‘அமுதம்’ என்றார் திருவள்ளுவர். அந்த அமுதத்தையே நஞ்சாக்கிய தலைமுறை இது. எதிர்காலச் சந்ததியை நினைத்தால் அச்சமும் கவலையும் மேலிடுகின்றன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
2015 டாப் 10 பிரச்னைகள் - மழை வெள்ளம் - இயற்கைச் சீற்றம்

இது ஊழிக்காலம். இதில் இருந்து தப்ப வேண்டுமானால், `இயற்கையை மனிதனால் வெல்ல முடியாது’ எனும் உண்மையை உணர வேண்டும். மேலும், ‘இயற்கையைச் சிதைத்தால் மனித வாழ்வும் சிதைந்துபோகும்’ என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

அரசு, ஒரு பக்கம் நிவாரணம் வழங்கும்; இன்னொரு பக்கம் முறைகேடான கட்டடங் களுக்கும் ஆக்கிரமிப்புகளுக்கும் அனுமதி வழங்கும். நியாயமாக, இந்தச் சிக்கல்களுக்கான தீர்வு என்ன என்பதை அரசு அறிவிக்க வேண்டும். அதற்கு முன்னர், இந்தச் சிக்கல்களுக் கான மூல காரணங்களை விளக்க வேண்டும். இவற்றை எல்லாம் செய்தால் அரசும், அதில் பங்கெடுக்கும் கட்சிகளும் அதிகார வர்க்கமும் குற்றவாளிக் கூண்டில் நிற்க வேண்டிவரும். ஆகவே, இது நடப்பதற்கான சாத்தியம் என்ன?

சென்னை உள்ளிட்ட நகரங்களின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துகிறோம் என்ற பெயரில், இந்த நகரங்களில் பெரு நிறுவனங்கள் களம் இறங்கும் காட்சிகள் விரைவில் அரங்கேறும். மக்களின் வரிப் பணம், உலகவங்கிக் கடன் எல்லாம் சேர்ந்து மேலும் பல லட்சம் கோடிகள், பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கப்படும். எந்தத் தொழில் துறையால் இயற்கைச் சூழல் சிதைகிறதோ, அதே தொழில் துறையை மேலும் வளர்த்தெடுக்கும் செயல்கள்தான் இனி அரங்கேறும்.

இந்தச் சூழலில் இருந்து உங்களைக் காப்பாற்றுவார்கள் என, யாரையும் நம்பா தீர்கள்.  உங்கள் வாழ்க்கைமுறையை இயற்கைக்கு நெருக்கமானதாக மாற்றுங்கள். நீங்கள் இயற்கையை அரவணைத்தால், அது உங்களை அரவணைக்கும். இதுதான் இயற்கைச் சீற்றத்தை எதிர்கொள்ள சாத்தியமான, சிறந்த, எளிமையான, இனிமையான வழி!