Published:Updated:

காவிரி நீர்: தமிழக-கர்நாடக முதல்வர்கள் இன்று பேச்சுவார்த்தை

காவிரி நீர்: தமிழக-கர்நாடக முதல்வர்கள் இன்று பேச்சுவார்த்தை
காவிரி நீர்: தமிழக-கர்நாடக முதல்வர்கள் இன்று பேச்சுவார்த்தை

காவிரி நீர்: தமிழக-கர்நாடக முதல்வர்கள் இன்று பேச்சுவார்த்தை

பெங்களூரு:உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி காவிரி நதி நீர் பிரச்னை தொடர்பாக கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டருடன்,தமிழக முதல்வர் ஜெயலலிதா பெங்களூரில் இன்று பேச்சுவார்த்தை ந்டத்துகிறார்.

டெல்டா மாவட்டங்களில் கருகும் நெற்பயிர்களைக் காப்பாற்ற காவிரியில் தண்ணீர் திறந்துவிடுமாறும், நடப்பு பருவத்தில் தமிழகத்துக்கு தரவேண்டிய நிலுவையில் உள்ள 52.8 டி.எம்.சி. தண்ணீரை உடனடியாக வழங்குமாறு கர்நாடக முதல்வரிடம் வலியுறுத்தவும் முதல்வர் ஜெயலலிதா திட்டமிட்டுள்ளார்.

காவிரி நதி நீர் பங்கீட்டுப் பிரச்னை, டெல்டா பாசனத்துக்கு தேவையான தண்ணீரை காவிரியிலிருந்து கர்நாடகம் திறந்துவிடுவது உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து தமிழகம், கர்நாடகம் ஆகிய இரு மாநில முதல்வர்கள் சந்தித்துப் பேசி சுமுகத் தீர்வுகாண முயல வேண்டும் என்று இது தொடர்பான வழக்கு விசாரணையின் போது உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. அதன் அடிப்படையில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது.

இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க சென்னையிலிருந்து அதிகாரிகளுடன் தனி விமானம் மூலம் முதல்வர் ஜெயலலிதா இன்று பிற்பகல் 2 மணிக்கு பெங்களூர் செல்கிறார். பெங்களூர் பழைய விமான நிலைய சாலையில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஹோட்டலில் கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரை முதல்வர் ஜெயலலிதா பிற்பகல் 3 மணிக்கு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

தென் மேற்குப் பருவமழை, வடகிழக்குப் பருவமழை ஆகிய இரண்டும் பொய்த்ததால் டெல்டா விவசாயிகள் பாசனம் செய்ய முடியாமல் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். எனவே காவிரியில் தமிழகத்துக்கு தர வேண்டிய 52.8 டி.எம்.சி. தண்ணீரை உடனடியாகத் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரிடம் முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பலனளிக்குமா?

இந்நிலையில் கடந்த காலங்களில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் கர்நாடகம் தொடர்ந்து தமிழகத்திற்கு தண்ணீர் விட மறுத்து வந்த நிலையில்,இரு மாநில முதல்வர்களும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு குறித்து டெல்டா பாசன விவசாயிகள் கடும் அதிருப்தி வெளியிட்டிருந்த நிலையில், இந்த பேச்சுவார்த்தை எந்த அளவுக்கு பலனளிக்கும் என்ற
எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

கர்நாடகம் தொடர்ந்து தனது பழைய நிலையிலேயே பிடிவாதமாக இருந்தால்,உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவை பொறுத்தே தமிழகத்திற்கு நியாயம் கிடைக்கும்.

தலைமைச் செயலகத்தில் ஆலோசனை

முன்னதாக காவிரி நதிநீர் பிரச்னை தொடர்பாக, கர்நாடக முதல்வருடன் விவாதிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா நேற்று ஆலோசனை நடத்தினார்.

##~~##
இந்த ஆலோசனையில் தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி, பொதுப்பணித் துறை செயலாளர் சாய்குமார், அரசு தலைமை வழக்குரைஞர் நவநீதகிருஷ்ணன், காவிரி தொழில்நுட்ப குழுவின் தலைவர் ஆர்.சுப்பிரமணியன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் அம்சங்கள் குறித்தும், டெல்டா மாவட்டத்தில் விவசாயத்துக்குத் தேவைப்படும் தண்ணீரின் அளவு பற்றியும் விவாதிக்கப்பட்டதாக தலைமைச் செயலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
பின் செல்ல