Published:Updated:

2015 டாப் 10 பிரச்னைகள் - தொடர்ந்த மின்வெட்டு... முடங்கிய மின் திட்டங்கள்

2015 டாப் 10 பிரச்னைகள் - தொடர்ந்த மின்வெட்டு... முடங்கிய மின் திட்டங்கள்

2015 டாப் 10 பிரச்னைகள் - தொடர்ந்த மின்வெட்டு... முடங்கிய மின் திட்டங்கள்

2015 டாப் 10 பிரச்னைகள் - தொடர்ந்த மின்வெட்டு... முடங்கிய மின் திட்டங்கள்

Published:Updated:

2015-ம் ஆண்டு தமிழகத்தை ஆட்டிப்படைத்த 10 தலையாயப் பிரச்னைகளைப் பற்றி பல்வேறு துறை சார்ந்த நிபுணர்கள் அலசுகிறார்கள்...

‘தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றுவேன்’ என 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில் வீறுகொண்டு அறிவித்தார் ஜெயலலிதா. ஆனால், மின்வெட்டின் கொடுமை இந்த ஆண்டு முழுவதும் தொடர்ந்தது. மக்களுக்கு மின்வெட்டு மட்டுமே கண்ணுக்குத் தெரியும். இதற்குள் மிகப் பெரிய மின்சாரச் சூறையாடலே நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

2015 டாப் 10 பிரச்னைகள் - தொடர்ந்த மின்வெட்டு... முடங்கிய மின் திட்டங்கள்

தனியாரிடம் இருந்து மின்சாரத்தை கூடுதல் விலை கொடுத்து வாங்கியதால், மின்சார வாரியத்தின் இழப்பு 94,400 கோடி ரூபாயை எட்டிவிட்டது. வருடம்தோறும் பெரும் இழப்பைச் சம்பாதித்துக் கொடுக்கும் ஒரே மின்சார வாரியம், இந்தியாவிலேயே தமிழக மின்வாரியம் மட்டும்தான். மின் உற்பத்திக்கான கட்டமைப்பை மேம்படுத்தாமல், கொள்முதல் செய்வதை மட்டுமே அரசு விரும்புகிறது. கொள்முதல் என்றால், ஊழல் என்றே பொருள்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 8,800 கோடி ரூபாய் செலவில் உடன்குடி மின் திட்டத்தை அறிவித்தார் ஜெயலலிதா. இந்தத் திட்டம் 1,600 மெகாவாட் மின்சாரத்துக் கானது. இப்போது வரை இது தொடங்கப் படவில்லை. உடன்குடி பற்றி அறிவித்த அந்த ஆண்டிலேயே, தமிழகத்தில் செயல்பாட்டில் இருந்த நான்கு எரிவாயு நிலையங்களில் மூன்று நிலையங்கள், படுமோசமாகப் பழுதடைந்து, ஓராண்டு காலமாக உற்பத்தியும் இல்லாமல் முடங்கின. வாங்க முடியாத எரிவாயுவுக்கு நாள்தோறும் மூன்று கோடி வீதம் வீணடித்துக் கொண்டிருந்தது அரசு. வழுதூர் இரண்டாம் நிலை மின்திட்டம், கடந்த ஓராண்டுக்கு மேலாக பழுதடைந்த நிலையிலேயே கிடக்கிறது. இத்தனைக்கும் கடந்த டிசம்பரில் 100 கோடி ரூபாய் பராமரிப்புச் செலவும் செய்யப்பட்ட புதிய மின்நிலையம் இது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

2015 டாப் 10 பிரச்னைகள் - தொடர்ந்த மின்வெட்டு... முடங்கிய மின் திட்டங்கள்

இதுதவிர, தொடங்கியிருக்கவேண்டிய காட்டுப்பள்ளி, உடன்குடி திட்டங்களின் திறனை 3,200 மெகாவாட்டில் இருந்து 2,640 மெகாவாட்டாகக் குறைத்துவிட்டனர்.  அப்படிக் குறைக்கப்பட்ட மின்  திட்டங்களும் தொடங்கப்படவில்லை. ஆலோசனைக் குழு, ஒப்பந்தப் புள்ளிகள் ரத்து, நீதிமன்ற வழக்கு என இழுத்தடித்துக்கிடக்கிறது. இன்று தொடங்கினாலும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகே, உற்பத்தியை எதிர்பார்க்க முடியும் என்ற நிலையில், இந்தத் திட்டங்கள் முடங்கிக்கிடக்கின்றன.

இப்படி கட்டுமானத்தில் இருந்த  அரசுத் திட்டங்களைக் கிடப்பில் போட்டுவிட்டு, 2012, 2013-ம் ஆண்டிலேயே 3,300 மெகா வாட்டை 15 ஆண்டுகால கொள்முதலுக்கு ஒப்பந்தம் போட்டுள்ளது. அதுவும், யூனிட் மின்சாரம் 4.91 ரூபாய் என்ற விலையில் (இந்திய மின்சாரச் சந்தையில் அதிகபட்ச விலையே யூனிட் 3.60 ரூபாய்தான்).

மின்வாரியம் சந்தித்துவரும் 94,400 கோடி இழப்பில் 24,400 கோடி ரூபாய்க்கு புனரமைப்பு வேலைகள் முடிந்துவிட்டன. எஞ்சிய 70,000 கோடியில் 75 சதவிகிதமான 52,000 கோடி ரூபாயை மாநில அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும் என மத்திய அரசு சொல்கிறது. இதை ஏற்பதைத் தவிர,  மாநில அரசுக்கு வேறு வழி இல்லை. இப்படி வந்தாலும், எஞ்சிய 18,000 கோடியை மின்கட்டண உயர்வாக மாற்றும் வேலைகள்தான் நடக்கும். இன்றைய மின் கட்டணத்தைப்போல மேலும் 50 சதவிகிதக்  கட்டணத்தை மக்கள் சுமந்தாக வேண்டும்.

விரைவில் 2016-ம் ஆண்டு தேர்தல் நடக்க விருப்பதால், அடுத்த ஆட்சியின் தலையில் போய் இது முடியும். இந்த அரசு மௌனமாக மக்களுக்கு எதையும் சொல்லாமல் தப்பித்துக் கொள்ளும். இனிவரும் காலங்களில் கண்ணுக்குத் தெரியாத மின்சாரம் ஏற்படுத்தப் போகும் துயரம் அளவு கடந்ததாக இருக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism