Published:Updated:

2015 டாப் 10 பிரச்னைகள் - ஊருக்குள் வரும் வனவிலங்குகள்

2015 டாப் 10 பிரச்னைகள் - ஊருக்குள் வரும் வனவிலங்குகள்

2015-ம் ஆண்டு தமிழகத்தை ஆட்டிப்படைத்த 10 தலையாயப் பிரச்னைகளைப் பற்றி பல்வேறு துறை சார்ந்த நிபுணர்கள் அலசுகிறார்கள்...

மனிதன் - வனவிலங்கு மோதல் செய்தி, வழக்கமான ஒன்றாகிவிட்டது. நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியைச் சேர்ந்த மகாலட்சுமி என்பவர், புலி கடித்ததில் மரணம் அடைந்தார். தர்மபுரி அருகே யானைகள் ஊருக்குள் புகுந்தன. வனவிலங்கு சரணாலயத்தின் பெயரால், காட்டைப் பூட்டிவைக்கத் தொடங்கிவிட்டதன் விளைவுகள் இவை. முன்னர் ஒரு செக்போஸ்ட் இருந்த காட்டுப் பகுதியில், இப்போது 100 செக்போஸ்ட்டுகள். வனவிலங்குகள், தங்கள் வழக்கமான பாதையில் செல்ல முடியாமல் திணறுகின்றன. காட்டுப் பன்றிகள், யானைகள், புலிகள், சிறுத்தைகள்... போன்றவை ஊருக்குள் வருகின்றன.

2015 டாப் 10 பிரச்னைகள் - ஊருக்குள் வரும் வனவிலங்குகள்

`யானை மனிதர்களை மிதித்துக் கொன்றது’ எனச் செய்திகள் வருகின்றன. எந்த உயிருள்ள பொருளையும் மிதிக்காது என்பதே யானையின் இயல்பு. யானையின் குணமே தனது இருப்பிடத்துக்குள் அத்துமீறி நுழைபவர்களை விரட்டுவது மட்டுமே; மதம்பிடித்த யானைகள் தனி வகை. கடுமையான சட்டம் மூலம் காட்டைப் பூட்டிவைக்கும்போது, அடைக்கப்பட்ட இடத்துக்குள் இனப்பெருக்கம் செய்ய விலங்குகளைக் கட்டாயப்படுத்துகிறோம்.

நமது காடுகள்... அணைக்கட்டு, சாலைகள், மக்களின் வசிப்பிடம் என துண்டுதுண்டாக உள்ளன. இதில் விலங்குகளுக்கான வசிப்பிடம் என்பது மிகச் சிறிய பரப்பாகச் சுருங்கி விடுகிறது. ஒரு ஏக்கர் காட்டுக்குள் இரண்டு யானைகள் வாழ முடியும் என்றால், அந்த இரண்டு யானைகள் சேர்ந்து குட்டி போட் டால், இன்னொரு ஏக்கர் நிலம் தேவைப்படும். ஆனால், யானைகள் பெருகும்போதும் பரப்பளவு என்பது ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. இதனால் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டு, அவை வெளியே வருகின்றன. விலங்குகள், நகர்ந்துகொண்டே இருப்பவை. அதன் வழக்கமான பாதை அடைபடும்போது, கிடைக்கும் பாதையின் வழியே ஊருக்குள் வருகின்றன. இந்த எளிய உயிரியல் உண்மையை உணர்ந்துகொள்ளாமல், ஊருக்குள் வனவிலங்குகள் வந்தால் பிடி, விரட்டு, கொல்... எனச் செயல்படுவது மனிதர்களின் அறிவீனம். மேட்டுப்பாளையம், பவானி ஆற்றைக் கடந்துவரும் யானைகள், சிறுமுகை வந்து தேக்ககப்பட்டி செல்லும் வகையில் மிகப் பெரிய அளவில் யானையின் வழித்தடம் இருந்தது. ஒரு தெருவுக்கு ஆணைக்காரத் தெரு எனப் பெயரே இருந்தது. இப்போது பெரும்பகுதி யானை வழித்தடங்கள் அழிக்கப்பட்டுவிட்டன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
2015 டாப் 10 பிரச்னைகள் - ஊருக்குள் வரும் வனவிலங்குகள்

சூரிய மண்டலத்தில் உள்ள கோள்கள் எப்படி ஒன்றை ஒன்று நீள்வட்டத்தில் சரியாகச் சுற்றுகிறதோ, அதைப்போலத்தான் விலங்குகளும். அதன் பாதைகள், வாழ்விடம், வலசைப் பாதை, வேட்டை, நீர்நிலை, ஓய்வு... என அனைத்தும் திட்டமிடப்பட்டவை. இவற்றில் எந்த ஒன்றில் நாம் கை வைத்தாலும், மிகப் பெரிய பாதிப்பே ஏற்படும். ‘கல்லாறு பகுதியில் யானைகள் அடிக்கடி வெளியில் வருகிறது’ என்ற புகாரையொட்டி, அங்கு ஆறு மாதங்கள் ஆய்வு நடத்தினோம். `250 ஏக்கர் காட்டுப் பகுதியை விலைக்கு வாங்கி யானைகளின் வசிப்பிடமாக அறிவிக்க வேண்டும்’ என அறிக்கைக் கொடுத்தோம். ஆனால், அதைக் கிடப்பில் போட்டு விட்டார்கள். வெளிநாடுகளில் விலங்குகளை சுதந்திரமாக நடமாட அனுமதிக்கிறார்கள். தென்ஆப்பிரிக்காவில், நாங்கள் ஒருகடையில் தேநீர் சாப்பிடும்போது, எங்களுக்குப் பின்னால் ஒரு காண்டாமிருகம் நின்றிருந்தது. கடைக்காரரோ, ‘ அது வரும் போகும். நீங்க டீ சாப்பிடுங்க’ என இயல்பாகச் சொன்னார். அப்படி ஒரு சுதந்திரமான சூழல் இங்கு உருவாக வேண்டும்!