Published:Updated:

2ஜி விவகாரம்:தணிக்கை அமைப்பை முடமாக்க மத்திய அரசு முயற்சி?

2ஜி விவகாரம்:தணிக்கை அமைப்பை முடமாக்க மத்திய அரசு முயற்சி?
2ஜி விவகாரம்:தணிக்கை அமைப்பை முடமாக்க மத்திய அரசு முயற்சி?

2ஜி விவகாரம்:தணிக்கை அமைப்பை முடமாக்க மத்திய அரசு முயற்சி?

புதுடெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் இழப்பை மதிப்பிட்டது தொடர்பான விவகாரத்தை வைத்து, தலைமை கணக்கு தணிக்கை அமைப்பை நிரந்தரமாக முடமாக்க மத்திய அரசு முயற்சிப்பதாக அந்த அமைப்பின் முன்னாள் அதிகாரிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி வினோத்ராய் அறிக்கை தாக்கல் செய்தார். பின்னர், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, 2ஜி ஸ்பெக்டரம் உரிமங்கள் ஏலம் விடப்பட்டன.அவை மிகக்குறைந்த தொகைக்கே விற்கப்பட்டன.

எனவே, ஸ்பெக்ட்ரம் குறித்த தணிக்கை அதிகாரியின் மதிப்பீடு மிகைப்படுத்தப்பட்டது என்று மத்திய அரசும், காங்கிரஸ் தலைவர்களும் குற்றம் சாட்டி வருகிறார்கள். இதுதொடர்பாக, வினோத்ராயை பகிரங்க விவாதத்துக்கு வருமாறு மத்திய அமைச்சர் மனீஷ் திவாரி அழைப்பு விடுத்துள்ளார்.

மத்திய அரசு மீது குற்றச்சாட்டு

##~~##
இந்நிலையில்,முன்னாள் தணிக்கை அதிகாரிகள், தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி வினோத்ராய்க்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.ஓய்வுபெற்ற உயர் அதிகாரிகள் எஸ்.கிருஷ்ணன், எஸ்.சி.ஆனந்த், ராமசாமி அய்யர், ஜே.என்.குப்தா, பி.பி.மாத்துர், ஆர்.பரமேஷ்வர் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,"தலைமை கணக்கு அதிகாரிக்கு எதிராக காங்கிரசும், மத்திய அரசும் பிரசாரம் செய்து வருகிறது. இது, திட்டமிட்ட தாக்குதல். அரசியல் சட்டத்தின் முக்கிய தூணான தணிக்கை அமைப்பை சேதப்படுத்தும் முயற்சி.இந்த பிரசாரத்தின் நோக்கம், தலைமை கணக்கு தணிக்கை அமைப்பை நிரந்தரமாக முடமாக்கும் முயற்சி ஆகும்.
தணிக்கை அதிகாரி வினோத்ராயை பகிரங்க விவாதத்துக்கு மனீஷ் திவாரி அழைப்பு விடுத்துள்ளார். தணிக்கை அறிக்கை, தாக்கல் செய்யப்பட்டு, பாராளுமன்றத்தில் வைக்கப்பட்டு விட்டால், அது நாடாளுமன்றத்தின் சொத்தாகி விடும். அதன்பிறகு அதுபற்றி வேறு எந்த களத்திலும் விவாதிக்க முடியாது" என்று கூறியுள்ளனர்.
அடுத்த கட்டுரைக்கு