Published:Updated:

2013 ஜூன் முதல் மின்வெட்டே இருக்காது: அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்

2013 ஜூன் முதல் மின்வெட்டே இருக்காது: அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்
2013 ஜூன் முதல் மின்வெட்டே இருக்காது: அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்
2013 ஜூன் முதல் மின்வெட்டே இருக்காது: அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்

சென்னை: தமிழகத்தில் 2013 ஜூன் மாதம் முதல் மின்வெட்டே செய்யப்படாது  என்றும்,தமிழகத்தில் இப்போது நடைமுறையில் இருந்துவரும் பல மணி நேர  மின்வெட்டு, வரும் டிசம்பர் முதல் படிப்படியாகக் குறைக்கப்படும் என்றும் மின்துறை  அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

இந்திய தொழில் வர்த்தக சபை கூட்டமைப்பு சென்னையில் ஏற்பாடு செய்திருந்த  கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய விஸ்வநாதன்,"தமிழகத்தில் மின் தேவைக்கும்  உற்பத்திக்கும் இடையேயான இடைவெளி 4000 மெகா வாட் அளவுக்கு உயர்ந்துள்ளது.  இதற்கு மத்திய மின் தொகுப்பிலிருந்து தமிழகத்துக்கு கிடைக்கவேண்டிய பங்கு  குறைக்கப்பட்டிருப்பதே முக்கியக் காரணம்.இதை ஈடுகட்ட மத்திய அரசு கூடுதல்  மின்சாரம் வழங்கவேண்டும் என தமிழகத்தின் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையும்  நிராகரிக்கப்பட்டது.

இந்த நிலையில்,வட மாநில மின் வழித் தடங்களுடன் (கிரிட்) தென் மாநிலங்கள்  முழுமையாக இணைக்கப்படாததால், தேவைக்கு அதிகமாக மின்சரம் உற்பத்தி செய்யும்  மாநிலங்களிலிருந்து தமிழகம் மின் கொள்முதல் செய்ய முடியாத நிலையும்  ஏற்பட்டுள்ளது. இப்போது, வடமாநில மின் கட்டமைப்பிலிருந்து (கிரிட்) ஒரு வழித்  தடம் மட்டுமே தென் மாநிலங்களை இணைக்கிறது.

இந்த ஒரு பாதை வழியாக தமிழகம், கர்நாடகம், ஆந்திரம், கேரளம் ஆகிய 4  மாநிலங்களும் மின்சாரத்தை கொண்டு வருகின்றன. தொடர் கோரிக்கைகளின்  அடிப்படையில் ஒரே ஒரு புதிய வழித் தடத்தை அமைப்பதற்கு மத்திய அரசு கடந்த மாதம்  அனுமதி அளித்து திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தப் பணி 2014 மார்ச் மாதத்தில்தான் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2013 ஜூன் முதல் மின் வெட்டு இருக்காது: அதுவரை நிலைமையை சமாளிப்பதற்காக  தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய திட்டங்களை விரைவுபடுத்தும்  நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

##~~##
மேட்டூர், வல்லூர், வடசென்னை அனல் மின் நிலைய திட்டங்களிலிருந்து வரும் ஜூன்  முதல் 1880 மெகா வாட் அளவு மின்சாரம் உற்பத்தி செய்யப்பட உள்ளது. மேலும்,  சில தனியார் உற்பத்தியாளர்களும் 2013 ஜூன் மாதத்துக்குள் உற்பத்தியைத் தொடங்க  உள்ளனர். அவர்கள் முழு உற்பத்தியையும் அரசுக்குத் தர சம்மதித்துள்ளனர்.
இதுமட்டுமன்றி கூடங்குளம் அணு மின் நிலைய முதல் திட்டத்திலிருந்து முழுமையான  அளவில் (1000 மெகா வாட்) தமிழகத்துக்கு கிடைக்குமானால், இப்போதுள்ள 4000  மெகா வாட் மின் பற்றாக்குறை ஜூன் மாதம் முதல் சீராவதோடு கூடுதலாக 500 மெகா  வாட் மின்சாரம் கையிருப்பு இருக்கும்.
எனவே, தமிழகத்தில் நிலவிவரும் மின்வெட்டு வரும் டிசம்பர் முதல் படிப்படியாகக்  குறைக்கப்படும் என்பதோடு, 2013 ஜூன் மாதம் முதல் மின்வெட்டே இல்லாத  மாநிலமாக தமிழகம் மாறும் என்பதில் சந்தேகமில்லை" என்றார்.