Published:Updated:

இன்று சட்டமன்றப் பேரவை வைர விழா;ஜனாதிபதி, கவர்னர் பங்கேற்பு!

விகடன் விமர்சனக்குழு
இன்று சட்டமன்றப் பேரவை வைர விழா;ஜனாதிபதி, கவர்னர் பங்கேற்பு!
இன்று சட்டமன்றப் பேரவை வைர விழா;ஜனாதிபதி, கவர்னர் பங்கேற்பு!
இன்று சட்டமன்றப் பேரவை வைர விழா;ஜனாதிபதி, கவர்னர் பங்கேற்பு!

சென்னை: சென்னை கோட்டையில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை வைர விழா இன்று கோலாகலமாக நடைபெறுகிறது.இந்த விழாவில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி,ஆளுனர் ரோசய்யா உள்பட பலர் கலந்துகொள்கின்றனர்.

தமிழக சட்டமன்ற பேரவை தொடங்கப்பட்டு 60 ஆண்டுகள் ஆவதையொட்டி,தமிழக சட்டமன்ற பேரவையின் வைர விழா,சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டமன்ற பேரவை கூடத்தில் இன்று மாலை 4.30 மணியளவில் கோலாகலமாக நடைபெறுகிறது.

இதற்காக, புனித ஜார்ஜ் கோட்டை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. உள்ளே நுழையும், வெளியே வரும் வாயில்கள் அரண்மனை வாயில்கள் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற பேரவை கூடத்தில், சபாநாயகர் இருக்கை இருந்த இடத்தில் விழா மேடை அமைக்கப்பட்டுள்ளது. பேரவை கூடம் முழுவதும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி பிரணாப் பங்கேற்பு

இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று மாலை 3.30 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வருகிறார். சென்னை விமான நிலையத்தில் இருந்து கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு செல்கிறார்.அங்கு சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு,சென்னை கோட்டைக்கு வருகிறார். தமிழக சட்டமன்ற பேரவை வைர விழா, பேரவை கூடத்தில் சரியாக மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது.விழாவின் தொடக்கமாக, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி குத்துவிளக்கு ஏற்றுகிறார்.சபாநாயகர் ப.தனபால் அனைவரையும் வரவேற்கிறார்.

வைர விழா மலர்

அதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் ஜெயலலிதா, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கும், தமிழக ஆளுனர் ரோசய்யாவுக்கும் பொன்னாடை போர்த்தி, நினைவு பரிசு வழங்குகிறார். அதன்பின்னர், சபாநாயகர் ப.தனபால் பிற முக்கிய பிரமுகர்களுக்கு பொன்னாடை போர்த்தி, நினைவு பரிசுகளை வழங்குகிறார்.

தொடர்ந்து, முதலமைச்சர் ஜெயலலிதா தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை வைர விழா மலரை வெளியிடுகிறார்.அவரிடம் இருந்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி,கவர்னர் ரோசய்யா ஆகியோர் விழா மலரை பெற்றுக்கொள்கின்றனர்.அதனைத் தொடர்ந்து, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதிக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

##~~##
ஜனாதிபதி சிறப்புரை
தொடர்ந்து,சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் வாழ்த்துரை வழங்குகிறார்.முதல்மைச்சர் ஜெயலலிதா சிறப்புரை ஆற்றுகிறார். ஆளுனர் ரோசய்யா தலைமையுரை ஆற்றுகிறார். அதனைத் தொடர்ந்து, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சிறப்புரை ஆற்றுகிறார். இறுதியில், துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் நன்றியுரை ஆற்றுகிறார்.  அதனைத் தொடர்ந்து, நாமக்கல் கவிஞர் மாளிகையில் 10–வது மாடியில் உள்ள மாநாட்டு அரங்கில் தேநீர் விருந்து நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு தொடங்கும் விழா, மாலை 6 மணிக்கு நிறைவடைகிறது. உடனடியாக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

4 அடுக்கு பாதுகாப்பு
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை வைர விழாவையொட்டி, சென்னை தலைமைச் செயலகத்தில் 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நேற்று முதலே வாகனங்கள் எதுவும் கோட்டை வளாகத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை.