Published:Updated:

`ஹெச்.ராஜா, நித்யானந்தா மீது நடவடிக்கை எடுங்கள்!' - சென்னை கமிஷ்னரிடம் புகார் அளித்த இளைஞர் கூட்டமைப்பு

ஹெச்.ராஜா மற்றும் நித்யானந்தா சீடர்கள் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி தமிழ்நாடு மாணவர், இளைஞர் கூட்டமைப்பு சார்பில் சென்னை போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

`ஹெச்.ராஜா, நித்யானந்தா மீது நடவடிக்கை எடுங்கள்!' - சென்னை கமிஷ்னரிடம் புகார் அளித்த இளைஞர் கூட்டமைப்பு

சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் தமிழ்நாடு மாணவர், இளைஞர் கூட்டமைப்பு சார்பில் அளிக்கப்பட்ட புகாரில்... 

`இந்தியா பன்முகத் தன்மைகொண்ட நாடு. இங்கு எல்லா மதத்தைச் சார்ந்தவர்களும் வாழ்ந்துவருகிறார்கள். சகோதரத்துவம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் வாழ்ந்து வருகின்ற மக்களிடம் மதக்கலவரத்தைத் தூண்டும் விதமாகப் பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பேசிவருகிறார். அதுமட்டுமல்லாமல் சமுதாயத்தில் மதிக்கக்கூடிய இடத்தில் இருக்கிற கவிஞர் வைரமுத்துவை கீழ்த்தரமான வார்த்தைகளால் பேசிவருகிறார். இது ஆரோக்கியமான அரசியலுக்கு அழகல்ல. இவரின் செயல்பாடு பொதுமக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்துவருகிறது. எனவே, இவர் மீது வழக்குப்பதிவு செய்து குண்டர்சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று வேண்டுகிறோம்.

ஹெச்.ராஜாவின் செயல்பாடு மக்கள் மத்தியில் ஒருவித அச்ச உணர்வை உண்டுபண்ணுகிறது. மேலும், ஆண்டாள் விவகாரத்தில் நித்யானந்தாவின் சீடர்கள் சமூக வலைதளத்தில் ஆபாசமாக அரசியல் கட்சித் தலைவர்களை விமர்சித்து வருகிறார்கள். ஆன்மிகம் என்ற பெயரில் ஆபாசத்தைப் போதிக்கும் நித்யானந்தா மற்றும் அவரின் சீடர்கள் மீது வழக்குபதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.