Published:Updated:

கலப்பு திருமணங்களால் சாதியை ஒழிக்க முடியாது: டாக்டர் ராமதாஸ்

கலப்பு திருமணங்களால் சாதியை ஒழிக்க முடியாது: டாக்டர் ராமதாஸ்
கலப்பு திருமணங்களால் சாதியை ஒழிக்க முடியாது: டாக்டர் ராமதாஸ்
கலப்பு திருமணங்களால் சாதியை ஒழிக்க முடியாது: டாக்டர் ராமதாஸ்

தர்மபுரி: வன்னிய சமுதாய மக்கள்,உயிரே போனாலும் மானம் பெரிது என  நினைப்பவர்கள் என்றும், கலப்பு திருமணங்களால் சாதியை ஒழிக்க முடியாது என்றும்  பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

தர்மபுரி மாவட்ட பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் தர்மபுரி ராஜகோபால் கவுண்டர்  பூங்காவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர்,"தர்மபுரி அருகே 3 கிராமங்கள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு வன்னியர் சங்கமும்,  பாமகவும் காரணமல்ல.இந்த சம்பவம் நடந்த பின்னர், இங்குள்ள நிர்வாகிகள்  தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்த பின்னரே இதுபற்றி எனக்கு தெரியும்.

அந்த சம்பவத்தை பற்றி தெரிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன்.அந்த சம்பவத்திற்கு  பாமகவும் வன்னியர் சங்கமும்தான் காரணம் என பொய் பிரசாரம் பரப்பப்படுகிறது.  எங்கள் மீது குற்றம் சொல்பவர்கள் அதனை நிரூபிக்க வேண்டும்.

இந்த தாக்குதல் திட்டமிட்டு நடந்ததாக கூறுவது கண்டனத்திற்குரியது.வன்னியர்  சமுதாயத்தினர் எப்போதும் சாதி வெறியை தூண்டியதில்லை.உணவை விளைவிக்க  வேர்வை சிந்தி உழைப்பவர்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் நான் சமூக சமுதாய நல்லிணக்க கூட்டங்களை நடத்தி  உள்ளேன்.அப்போதெல்லாம் ஒரு சிறு வன்முறைகூட நடந்ததில்லை.பாமகவினர் எந்த  இடத்திலும் கட்டப்பஞ்சாயத்து நடத்தியதில்லை.

உயிரே போனாலும் மானம் பெரிது

வன்கொடுமை தடுப்பு சட்டத்தை எதிர்த்து இதுவரை நான் ஒரு வார்த்தைகூட  பேசியதில்லை.இப்போது அதுபற்றி பேச நேரம் வந்துவிட்டது.வன்கொடுமை தடுப்பு  சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது.பணம் பறிப்பதை நோக்கமாக கொண்டு நடக்கும்  நாடக காதல்களை தடுக்க வேண்டும் என்றுதான் மகாபலிபுரம் கூட்டத்தில் குரு பேசினார்.

குருவின் பின்னால் 2 கோடி வன்னியர்கள் உள்ளனர்.3 கிராமங்களில் நடந்த தாக்குதல்  சம்பவம் திட்டமிட்டு நடந்ததாகவும் சொத்துக்களை குறிவைத்து தாக்கியதாகவும்  சொல்கிறார்கள்.வன்னிய சமுதாய மக்கள் அடுத்தவர்களின் சொத்தை  கொள்ளையடிப்பவர்கள் இல்லை.உயிரே போனாலும் மானம் பெரிது என நினைப்பவர்கள்.

கலப்பு திருமணங்களால் சாதியை ஒழிக்க முடியாது

##~~##
வன்னியர் சங்கமும், பாமகவும் எந்த சாதிக்கும் எதிரான இயக்கம் இல்லை.  தலித்களுக்கு எதிராக நான் பேசியது இல்லை.இந்த கலவர சம்பவத்தால் போலீசாரின்  நடவடிக்கைக்கு பயந்து ஏராளமானோர் கிராமங்களை விட்டு வெளியேறி உள்ளனர்.
இத்தகையவர்களை கைது செய்ய மாட்டோம் என்று காவல்துறை உறுதியளிக்க  வேண்டும்.இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மாணவர்களுக்கு ஜாமீன் வழங்க  வேண்டும்.இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசாரோ, சி.பி.ஐ.யோ  விசாரணை நடத்துவதில் ஆட்சேபணை இல்லை. கலப்பு திருமணங்களால் சாதியை  ஒழிக்க முடியாது.அதன் மூலமாக தமிழ்தேசியம் உருவாகாது” என்றார்.