Published:Updated:

குடியரசுத்தலைவரிடம் விருதுபெறும் தமிழகத்தைச் சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி

குடியரசுத்தலைவரிடம் விருதுபெறும் தமிழகத்தைச் சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி
குடியரசுத்தலைவரிடம் விருதுபெறும் தமிழகத்தைச் சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் தேர்தல் நடைமுறைகளுக்கான பாதுகாப்பு பணிகளை திறம்பட செய்ததற்காகவும் பொதுமக்களிடம் நட்புறவை ஏற்படுத்தியதற்காகவும் கிழக்கு இம்பாலில் எஸ்.பி.யாகப் பணிபுரியும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி கபீப் என்பவருக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


தேசிய வாக்காளர் தினமான வருகிற 25ம் தேதி டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் இந்த விருதை அவருக்கு வழங்குகிறார். மணிப்பூர் மாநிலத்தில் பணியாற்றும் ஐ.பி.எஸ். அதிகாரி கபீப், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள துலுக்கன்குளம் என்ற ஊரைச் சேர்ந்தவர். மிகவும் சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்து ஐ.பி.எஸ். தேர்வாகி தற்போது  மணிப்பூர் மாநில எஸ்.பி-யாக பணியாற்றி வருகிறார். அதிலும் சிறப்பாக பணியாற்றி குடியரசுத்தலைவர் விருதை பெறுகிறார். இவருடைய பெற்றோர்கள்  ஆசிரியர்கள்.  திருநெல்வேலியைச் சேர்ந்த  மொபினாவை திருமணம் செய்துள்ளார்.  தங்கள் ஊரைச் சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி குடியரசுத்தலைவர் விருது பெறப்போவதை கேள்விப்பட்டு  ஊர் மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.