Published:Updated:

காவிரி: தமிழக-கர்நாடக அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

காவிரி: தமிழக-கர்நாடக அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!
காவிரி: தமிழக-கர்நாடக அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!
காவிரி: தமிழக-கர்நாடக அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

புதுடெல்லி: அணைகளில் உள்ள நீர் இருப்பு குறித்தும், குறைந்தபட்ச நீர் தேவை எவ்வளவு என்பது குறித்தும்  தமிழக-கர்நாடக அரசுகள் நாளைக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான வழக்கு கடந்த 26ந் தேதி உச்சநீதிமன்றத்தில்  விசாரணைக்கு வந்த போது, இரு மாநில முதல்வர்களும் பேச்சவார்த்தை நடத்த  வேண்டும் என அறிவுறுத்தியது.

அதன்படி தமிழக முதல்வர் ஜெயலலிதா, கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரை  நேற்று பெங்களூருவில் சந்தித்து பேசினார்.ஆனால் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில்  முடிவடைந்தது.தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட தர முடியாது என்று கர்நாடக  முதல்வர் தெரிவித்துவிட்டார்.

இந்நிலையில், காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடக் கோரி தமிழக அரசு  தாக்கல் செய்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் காவிரியின் குறுக்கே உள்ள அணைகளின் நீர் இருப்பு  குறித்து அறிக்கையை தாக்கல் செய்யுமாறு தமிழகம் மற்றும் கர்நாடக மாநில அரசுகளுக்கு  உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதோடு, சம்பா சாகுபடிக்கு தமிழகத்திற்கு எவ்வளவு டிஎம்சி நீர்  தேவை என்பது குறித்தும் தமிழக அரசு நாளைக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்  என்றும் கூறி, திங்கள் அன்று மீண்டும் விசாரணை நடைபெறும் என்று அறிவித்தது.