Published:Updated:

கண்ணீர் மல்க பா.ஜ.விலிருந்து விலகினார் எடியூரப்பா!

விகடன் விமர்சனக்குழு
கண்ணீர் மல்க பா.ஜ.விலிருந்து விலகினார் எடியூரப்பா!
கண்ணீர் மல்க பா.ஜ.விலிருந்து விலகினார் எடியூரப்பா!
கண்ணீர் மல்க பா.ஜ.விலிருந்து விலகினார் எடியூரப்பா!

பெங்களூரு: வருகிற டிசம்பர் 9 ம் தேதியன்று புதிய கட்சியை தொடங்குவதாக  அறிவித்துள்ள கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா,கண்ணீர் மல்க இன்று  பா.ஜனதாவிலிருந்து விலகினார். 

ஊழல் புகாரில் சிக்கியதால் பதவி இழந்த எடியூரப்பா, மீண்டும் தம்மை முதல்வராக  நியமிக்க வேண்டும் என்று பா.ஜனதாவை வலியுறுத்தினார்.ஆனால் அதற்கு அக்கட்சி  தலைமை உடன்படாததோடு,அவர் விடுத்த எச்சரிக்கைகளையும், மிரட்டல்களையும்   கண்டு கொள்ளவில்லை.

இதனையடுத்து வருகிற 9- ஆம் தேதி புதிய கட்சி தொடங்குவதாக அறிவித்தார்  எடியூரப்பா.இக்கட்சிக்கு 'கர்நாடக ஜனதா கட்சி' என பெயரிடப்பட்டுள்ளது. தேர்தல்  சின்னமாக 'சைக்கிள்' தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று எடியூரப்பா பா.ஜனதா கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட  அனைத்து பொறுப்பில் இருந்தும், எம்.எல்.ஏ. பதவியில் இருந்தும் விலகினார்.  இதற்காக பெங்களூரில் உள்ள வீட்டில் இருந்து தனது ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக  விதான சவுதாவுக்கு புறப்பட்டுச் சென்றார்.இதில் ஏராளமான தொண்டர்கள், நிர்வாகிகள்  கலந்து கொண்டனர்.

ஊர்வலம் விதான சவுதாவை அடைந்ததும் சபாநாயகரை சந்தித்து தனது எம்.எல்.ஏ.  பதவி ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்.

எடியூரப்பா விலகல் காரணமாக கர்நாடகத்தில் பா.ஜனதா கட்சி இரண்டாக உடைகிறது.
சமீபத்தில் எடியூரப்பா தனது வீட்டில் ஆதரவாளர்களுக்கு ரகசிய விருந்து கொடுத்தார்.  இதில் 40 எம்.எல்.ஏ.க்கள், 9 அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.அவர்கள் 9 ஆம்  தேதியன்று நடைபெறும் தொடக்க விழாவில் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது.

கண்ணீர் சிந்திய எடியூரப்பா

இதனிடையே பெங்களூரில் இன்று ஊர்வலம் தொடங்கும் முன் எடியூரப்பா கண்ணீர் மல்க  பா.ஜனதாவிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

"கர்நாடகத்தில் பா.ஜனதாவை வளர்க்க அரும் பாடுபட்டேன்.நாடாளுமன்ற தேர்தலில்  பா.ஜனதா எம்.பி.க்களை வெற்றிப் பெறச் செய்து நாடாளுமன்றத்துக்கு அனுப்பி  வைத்தேன். தென் மாநிலத்தில் முதல் முறையாக பா.ஜனதா ஆட்சி அமைக்க  காரணமாக இருந்தேன்.

##~~##
ஆனால் கட்சி மேலிடம் என்னை சரியாக நடத்த வில்லை.எனக்கு உரிய மரியாதை  அளிக்கவில்லை. என்னை உதாசீனப்படுத்தி விட்டது.அதனால் நான் இந்த முடிவுக்கு  வந்தேன்.என்னை அவர்கள் கட்சியில் இருந்து நீக்க வில்லை.நானாக வெளியேறி புதிய  கட்சியை தொடங்குகிறேன்.எனது ராஜினாமா கடிதத்தை கட்சி மேலிடத்திற்கு அனுப்பி  வைத்துவிட்டேன்”என்று எடியூரப்பா கூறினார்.
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.