Published:Updated:

கருணாநிதியுடன் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சந்திப்பு!

கருணாநிதியுடன் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சந்திப்பு!
கருணாநிதியுடன் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சந்திப்பு!
கருணாநிதியுடன் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சந்திப்பு!

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் வைர விழா கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள  சென்னை வந்த ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி,திமுக தலைவர் கருணாநிதியை அவரது  இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

சென்னை சிஐடி காலனியில் உள்ள கருணாநிதியின் இல்லத்திற்கு வந்த பிரணாப்  முகர்ஜியை,திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் சால்வை அணிவித்து வரவேற்றார்.  மேலும் டி.ஆர். பாலு, தயாநிதி மாறன்,கனிமொழி மற்றும் ஜெகத் ரட்சகன்  உள்ளிட்டோரும் அவரை வரவேற்றனர்.

அதனைத் தொடர்ந்து பிரணாப் முகர்ஜி,கருணாநிதியை சந்தித்துப் பேசினார்.

முன்னதாக இன்று நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவை வைர விழாவில் கலந்து  கொள்வதற்காக  டெல்லியிலிருந்து தனி விமானம் மூலமாக சென்னை விமான  நிலையத்தில் வந்து இறங்கினார். அவருக்கு தமிழக ஆளுனர் ரோசய்யாவும், முதல்வர்  ஜெயலலிதாவும் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர்.