Published:Updated:

அரசு பியூனை விட குறைந்த சம்பளம் பெறும் முத்ல்வர் மோடி!

அரசு பியூனை விட குறைந்த சம்பளம் பெறும் முத்ல்வர் மோடி!
அரசு பியூனை விட குறைந்த சம்பளம் பெறும் முத்ல்வர் மோடி!

அரசு பியூனை விட குறைந்த சம்பளம் பெறும் முத்ல்வர் மோடி!

அகமதாபாத்: குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் மாத சம்பளம்,  அம்மாநில   அரசு பியூனின் சம்பளத்தை விட குறைவாக வெறும் 12,553 ரூபாய் மட்டுமே என அவரது சொத்து விபர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநில அமைச்சர்கள் மாத சம்பளமாக 66,000 ரூபாயும், எம்.எல்.ஏ.,க்கள்  56,000 ரூபாயும் மாத சம்பளமாக பெறுகின்றனர்.

மேலும் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்களுக்கு சம்பளத்துடன் வீடு மற்றும் இதர  வசதிகளுக்கான செலவு தொகையும் வழங்கப்படுகிறது.அமைச்சர்களுக்கு கூடுதலாக  பஞ்சப்படி, பயணப்படி ஆகியவற்றுடன் தங்கும் பங்களா, வேலை ஆட்கள்  உள்ளிட்டவைகளுக்கான செலவு தொகையும் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் தேர்தல் ஆணையத்திடம் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தாக்கல்  செய்துள்ள சொத்து விபர அறிக்கையில்,2011-2012 ம் ஆண்டில் மோடியின் மாத  சம்பளம் ரூ.12,553 என குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் அவர் பெற்ற மொத்த வருமானம் ரூ.1,50,630 ஆகும்.

இது குஜராத் மாநில அமைச்சர்களின் மாத வருமானத்‌தில் ஐந்தில் ஒரு பங்கு என்பது  குறிப்பிடத்தக்கது.

மோடியின் சொத்து விபரம்:

கடந்த 2007ம் தேர்தலின் போது தனது சொத்து விபரம் மற்றும் ஆண்டு வருமானத்தை  குறிப்பிடாத மோடி, இந்த தேர்தலில் தனது சொத்து மதிப்பை வெளியிட்டுள்ளார்.

அவர் தாக்கல் செய்துள்ள சொத்து விபர அறிக்கையின்படி, குஜராத் காந்திநகரில் 330  சதுர மீட்டர் பரப்பளவில் சிறிய வீடு மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த வீடும் 2002ம் ஆண்டு மாநில அரசால் உயர்ந்த மானிய விலையில்  அளிக்கப்பட்டதாம்.

2007ம் ஆண்டு ரூ.30 லட்சமாக இருந்த மோடியின் மொத்த சொத்தின் மதிப்பு,  தற்போது ரூ.1 கோடியாக உயர்ந்துள்ளது.

சொத்து மதிப்பு கூடினாலும் அவரிடம் உள்ள பணத்தின் அளவு 4,700 ரூபாயாக  குறைந்துள்ளது.2007 ம் ஆண்டு தேர்தலின் போது இது ரூ.11,200 ஆக இருந்தது  குறிப்பிடத்தக்கது.

##~~##
இது தவிர மோடியிடம் ரூ.1,23,777 மதிப்பிலான 4 தங்க மோதிரங்களும்,  வங்கித்தொகையாக ரூ.27,24,409 ம் உள்ளதாம்.
மேலும் உள்கட்டமைப்பு துறையில் மோடி ரூ.20,000 அளவிற்கு முதலீடு  செய்துள்ளார்.
அவரது புதிய சொத்து விபரத்தின் படி தேசிய சேமிப்பு சான்றிதழ் கணக்கின் கீழ்  ரூ.14,636 மதிப்பிலான சொத்து உள்ளது.
குஜராத் முதல்வராக இருந்து கடந்த 5 ஆண்டுகளில் மோடி பெற்ற மொத்த சம்பளம்  ரூ.39 லட்சம் ஆகும்.
அடுத்த கட்டுரைக்கு