Published:Updated:

மருத்துவ நுழைவு தேர்வுக்கு தமிழக அரசு தடை பெற வேண்டும்: ராமதாஸ்

மருத்துவ நுழைவு தேர்வுக்கு தமிழக அரசு தடை பெற வேண்டும்: ராமதாஸ்
மருத்துவ நுழைவு தேர்வுக்கு தமிழக அரசு தடை பெற வேண்டும்: ராமதாஸ்
மருத்துவ நுழைவு தேர்வுக்கு தமிழக அரசு தடை பெற வேண்டும்: ராமதாஸ்

சென்னை: மருத்துவ படிப்புக்கு நுழைவு தேர்வுக்கு தமிழக அரசு நீதிமன்றம் மூலம் தடை  பெற வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
 
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"இந்தியா முழுவதும் உள்ள  மருத்துவ மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கான தேசியத் தகுதி  மற்றும் நுழைவுத் தேர்வு அறிவிப்பை, அதை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட  அமைப்பான மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் வெளியிட்டிருக்கிறது. நுழைவுத்  தேர்வுக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் வழங்கப்படுகின்றன.
 
அடுத்த ஆண்டு மே 5 ஆம் தேதி நடத்தப்படவிருக்கும் இந்த நுழைவுத் தேர்வு, இந்திய  மருத்துவக் குழு மற்றும் பல் மருத்துவக் குழுவின் அங்கீகாரம் பெற்ற அனைத்து மருத்துவ  மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளுக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
 
இதனால் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்கள்  அனைவரும் கண்டிப்பாக நுழைவுத் தேர்வு எழுதியே தீர வேண்டும் என்ற நிலை  ஏற்பட்டிருக்கிறது.
 
அனைத்திந்திய அளவில் மருத்துவப்படிப்புக்கு நுழைவுத் தேர்வு நடத்துவதென மத்திய  அரசு கடந்த 2010-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முடிவு செய்தபோதே அதற்கு நான் கடும்  எதிர்ப்பு தெரிவித்திருந்தேன். தமிழக முதலமைச்சர் மற்றும் பிற கட்சித் தலைவர்களும்  கூட மத்திய அரசின் முடிவைக் கண்டித்திருந்தனர்.
 
ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அனைத்திந்திய அளவில் மருத்துவ  நுழைவுத் தேர்வை நடத்த மத்திய அரசு முடிவு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.  மருத்துவப் படிப்பின் தரத்தை உயர்த்தவே, இந்த நுழைவுத் தேர்வு நடத்தப்படுவதாக  மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
 
ஒரு புறத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகளையும், நிகர்நிலைப் பல்கலைக்  கழகங்களையும் திறந்து எந்த தகுதியுமே இல்லாத பணக்கார மாணவர்களை,  லட்சக்கணக்கில் பணம் பெற்றுக் கொண்டு சேர்த்துக் கொள்ள அனுமதிக்கும் மத்திய  அரசு, இன்னொருபுறம் ஏழை மாணவர்கள் படிக்கக் கூடிய அரசு மருத்துவக்  கல்லூரிகளுக்கு மட்டும் நுழைவுத் தேர்வு நடத்த முயல்வது கேலிக்குரிய முரண்பாடு  ஆகும்.
 
தமிழகத்தில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு கடந்த  2007-ம் ஆண்டில் சிறப்பு சட்டம் மூலம் ரத்து செய்யப்பட்ட பிறகுதான் அப்படிப்புகளில்  சேரும் ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது.  இந்த நேரத்தில் மருத்துவப் படிப்புக்கு மீண்டும் நுழைவுத் தேர்வு நடத்தினால்,  கிராமப்புற, ஏழை மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
 

##~~##
இதைக் கருத்தில் கொண்டு மருத்துவப் படிப்புக்கான தேசிய நுழைவுத் தேர்விலிருந்து  தமிழகத்திற்கு விலக்கு அளிக்க மத்திய அரசு முன்வர வேண்டும்.
 
தமிழகத்தில் நுழைவுத் தேர்வுகள் ஏற்கனவே ஒழிக்கப்பட்டு, அதற்கு உச்சநீதி மன்றமும்  ஒப்புதல் அளித்திருப்பதால், அதையே காரணம் காட்டி இந்த நுழைவுத் தேர்வை  தமிழகத்தில் நடத்த தமிழக அரசு தடை பெற்றிருக்க வேண்டும்.
 
ஆந்திரா, ஜம்மு- காஷ்மீர் ஆகிய மாநிலங்கள் ஏற்கனவே இதுபோன்ற தடையை  பெற்றுவிட்டதால் அம்மாநிலங்களில் நுழைவுத் தேர்வு நடத்தப்படாது என மத்திய  அறிவித்திருக்கிறது.
 
தமிழக அரசு அத்தகைய தடையை பெறாததால் தமிழக மாணவர்கள் கடும் பாதிப்புக்கு  உள்ளாகியிருக்கின்றனர். எனவே தமிழக அரசு இனியாவது விழித்துக் கொண்டு மருத்துவ  நுழைவுத் தேர்வுக்கு நீதிமன்றம் மூலமாக தடை பெற வேண்டும் என்று  வலியுறுத்துகிறேன்” என்று கூறியுள்ளார்.