Published:Updated:

ஃபெமா சட்டத் திருத்தம்: பிரகாஷ் காரத் கருத்து

ஃபெமா சட்டத் திருத்தம்:  பிரகாஷ் காரத் கருத்து
ஃபெமா சட்டத் திருத்தம்: பிரகாஷ் காரத் கருத்து
ஃபெமா சட்டத் திருத்தம்:  பிரகாஷ் காரத் கருத்து

பாட்னா, 02 December 2012: அன்னியச் செலாவணி மேலாண்மைச் சட்ட (ஃபெமா) கட்டுப்பாடுகள் சட்டத் திருத்தம் குறித்து நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு கோருவோம் என்று இடதுசாரி கட்சிகள் அறிவித்துள்ளன.

சில்லறை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டை நாடாளுமன்றத்தில் தொடர்ந்து எதிர்ப்பது தொடர்பான இடதுசாரிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் பிகார் தலைநகர் பாட்னாவில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கூறியது:

அமெரிக்கா மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் நிர்பந்தத்தின் காரணமாகவே மத்திய அரசு, நமது நாட்டில் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை (எஃப்டிஐ) கொண்டு வர முயற்சிக்கிறது. இது தேச விரோத, மக்கள் விரோத நடவடிக்கை. அன்னிய நேரடி முதலீடு வரும்போது உள்நாட்டில் வேலைவாய்ப்பு பெருகும், பொருளாதாரம் மேம்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறி வருகிறார். ஆனால் அவர்கள் ஒரு கோடி வேலைவாய்ப்பை அளிக்கும்போது, 5 கோடி சில்லறை வர்த்தகர்களின் வாழ்வாதாரத்தைப் பறித்துவிடுவார்கள்.

##~~##

இந்த முயற்சியில் மத்திய அரசு வெற்றி பெற்றாலும், நாடாளுமன்றத்தில் ஃபெமா சட்டத் திருத்த விவகாரத்தில் மற்றொரு வாக்கெடுப்பைக் கோருவோம். உச்ச நீதிமன்றம் கூறியுள்ளபடி அன்னிய நேரடி முதலீட்டை அமல்படுத்த ஃபெமா சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவது அவசியமானது. இதனைத் தடுப்பதற்காகவே இடதுசாரிகள் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்துவார்கள்.

இந்தியாவில் கூட வால்மார்ட் நிறுவனம் வர்த்தகக் கூட்டு உடன்பாடு செய்துகொண்டுள்ள பார்தி நிறுவன அதிகாரிகள் 4 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துத்தான் பன்னாட்டு நிறுவனங்கள் அனுமதிக்கப்படும் என்று மத்திய அரசு கூறுகிறது. ஆனால் அவர்கள் உள்ளே நுழைந்த பின்னர் கட்டுப்படுத்துவது என்பது முடியாத காரியம். பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் சுயநலத்துக்காக எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்றார் காரத்.

யாரது நலன் முக்கியம்? இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஏ.பி. பரதன் கூறியது: சில்லறை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், அவர்களை நம்பியுள்ள குடும்பத்தினர் என 20 கோடி மக்களின் வாழ்க்கையுடன் மத்திய அரசு விளையாடி வருகிறது. பெரும் தொழிலதிபர்களின் நலனுக்காக செயல்படும் ஆட்சியாளர்கள், வெளிநாட்டு முதலாளிகளின் கைப்பாவை ஆகிவிட்டனர் என்று பரதன் குற்றம்சாட்டினார்.