Election bannerElection banner
Published:Updated:

`இவ்வளவு கடனுடன் போக்குவரத்துக் கழகங்களைத் தி.மு.க விட்டுச்சென்றது' - ஆவேசப்பட்ட முதல்வர் பழனிசாமி

அ.தி.மு.க புதிய உறுப்பினர்கள் சேர்க்கை தொடங்கியுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

`இவ்வளவு கடனுடன் போக்குவரத்துக் கழகங்களைத் தி.மு.க விட்டுச்சென்றது' - ஆவேசப்பட்ட முதல்வர் பழனிசாமி

இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் கூட்டாகச் சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி `கழகத்தின் (அ.தி.மு.க) சட்ட திட்டங்களின்படி, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை, உறுப்பினர்களைப் புதுப்பித்தல், புதிய உறுப்பினர்களைச் சேர்த்தல் ஆகிய பணிகளைச் செய்து முடிக்க வேண்டும். இவற்றின் அடிப்படையில், அ.தி.மு.க-வில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் தங்களுடைய பதிவைப் புதுப்பிப்பதற்கும் புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதற்குமான பணிகள் நடைபெற உள்ளன. புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு மற்றும் புதுப்பித்தலுக்கான விண்ணப்பப் படிவங்கள் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இன்று முதல் எல்லா மாவட்டங்களின் தலைமைக் கழக அலுவலகங்களிலும் விண்ணப்பப் படிவங்கள்  வழங்கப்படும்’ என்றார்.

பேருந்துக் கட்டண உயர்வை எதிர்த்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருவதைப் பற்றி செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்துப் பேசிய முதல்வர் ‘போக்குவரத்துக் கழக நிறுவனம் மிகப்பெரிய நிறுவனம். நாள் ஒன்றுக்கு பொதுமக்கள் 1.4 கோடி பேர் பயணம் செய்கிறார்கள். போக்குவரத்துக் கழகத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றுகிறார்கள். தற்போது போக்குவரத்துக் கழகம் கடுமையான இழப்பை சந்தித்துள்ளது. கடந்த தி.மு.க ஆட்சியில் அதாவது, 2011-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது போக்குவரத்து கழகம் பெற்ற கடன் ரூ. 3,392.15 கோடி. இது தி.மு.க ஆட்சியில் பெற்ற கடன். அதே ஆட்சியில் ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகை ரூ. 922.24 கோடி. இவ்வளவு கடனுடன் போக்குவரத்துக் கழகங்களைத் தி.மு.க விட்டுச்சென்றது’ என்று குற்றம்சாட்டியுள்ளார்.  

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு