Published:Updated:

நேரடி மானியம் வழங்குவதில் தேர்தல் விதியை மீறவில்லை: பிரதமர் அலுவலகம் விளக்கம்

நேரடி மானியம் வழங்குவதில் தேர்தல் விதியை மீறவில்லை: பிரதமர் அலுவலகம்  விளக்கம்
நேரடி மானியம் வழங்குவதில் தேர்தல் விதியை மீறவில்லை: பிரதமர் அலுவலகம் விளக்கம்
நேரடி மானியம் வழங்குவதில் தேர்தல் விதியை மீறவில்லை: பிரதமர் அலுவலகம்  விளக்கம்

புதுடெல்லி:  நேரடி மானியம் வழங்குவதில் தேர்தல் விதியை மீறவில்லை என்று பிரதமர்  அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.

குஜராத் சட்டசபை தேர்தல் டிசம்பர் 13, 17 தேதிகளில் 2-கட்டங்களாக  நடைபெறுகின்றது.

இந்நிலையில், குஜராத் மாநில பா.ஜனதா தலைவர் ஆர்.சி.பல்டு,  மாநில தேர்தல்  அதிகாரிக்கு புகார் மனு அனுப்பியிருந்தார். அதில்,"பல்வேறு திட்டங்களின் கீழ் அரசு  மானியத்தை நேரடியாக மக்களுக்கே வழங்கும் மத்திய அரசின் அறிவிப்பு தேர்தல்  நடத்தை விதிமுறைகளை மீறும் வகையில் உள்ளது.

முதல்கட்டமாக 51 மாவட்டங்களில் இத்திட்டத்தை தொடங்க மத்திய அரசு முடிவு  செய்துள்ளது. இதில் 4 மாவட்டங்கள் குஜராத் மாநிலத்தில் இருக்கிறது. எனவே இந்த  அறிவிப்பு தேர்தல் நடத்தை விதிமுறையை நேரடியாக மீறும் செயலாகும். தேர்தல்  கமிஷன் இவ்விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு நடிவடிக்கை எடுக்க வேண்டும்” என  குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன் பா.ஜனதாவின் மேலிட தலைவர்கள் சிலரும் தலைமை தேர்தல் கமிஷனரை  சந்தித்து இது தொடர்பாக மனு அளித்தனர்.

##~~##
இந்நிலையில் 'ஆதார்' அடையாள அட்டைகளை வழங்கும் மசோதாவுக்கு நாடாளுமன்ற  மேல்சபை ஒப்புதல் அளிக்காத நிலையில், மக்களுக்கு நேரடி மானியம் வழங்கும்  திட்டத்தை அவசரம் அவசரமாக அமலாக்குவது ஏன்? என்று உச்ச நீதிமன்றம் மத்திய  அரசிடம் விளக்கம் கேட்டிருந்தது.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள  அறிக்கையில்,"2012-ம் ஆண்டு, மார்ச் 16-ம் தேதி அன்று, அரசின் மானியத்  தொகையை நேரடியாக மக்களுக்கே அளிக்கும் திட்டம் பற்றி தனது பட்ஜெட்  உரையின்போது மத்திய நிதி மந்திரி ப. சிதம்பரம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இது  குறித்து பிரதமர் அலுவலகம் கடந்த செப்டம்பர் 28-ம் தேதியன்று அறிவிப்பு  வெளியிட்டது. ஆனால், தேர்தல் தேதி அக்டோபர் 3-ம் தேதி தான் அறிவிக்கப்பட்டது.  எனவே, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மத்திய அரசு மீறவில்லை” என்று  கூறப்பட்டுள்ளது.