Published:Updated:

`ஓ.பி.எஸ், இ.பி.எஸ் ஆட்சி முடிவுக்கு வரும்போது இது நிச்சயம் நடக்கும்' - நீக்கப்பட்ட டி.டி.வி ஆதரவாளர்கள் கொந்தளிப்பு

தமிழகத்தில் மாவட்டம் முழுவதும் அ.தி.மு.க தலைமைக் கழகம் டி.டி.வி.தினகரன் அணிக்குத் தாவிய நிர்வாகிகளை மாற்றி வருகிறது. இதனால் ஓ.பி.எஸ் இ.பி.எஸ் ஆதரவாளர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

சிவகங்கை மாவட்டத்தில் டி.டி.வி.தினகரன் அணிக்கு மாறிய அ.தி.மு.க கட்சியின் நிர்வாகிகளை ஓ.பி.எஸ் இ.பி.எஸ் ஆகிய இருவரும் நூற்றுக்கும் மேற்பட்டவர்களைக் கூண்டோடு அதிரடியாக நீக்கியுள்ளனர். இவர்கள் அனைவரும் கட்சியின் கொள்கைக்கும் கோட்பாடுகளுக்கும் முரணாகச் செயல்பட்டதாலும் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு அவப்பெயர் உண்டாகும் விதத்தில் செயல்பட்டதால் நீக்கப்பட்டதாகவும் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்திருக்கிறார்கள். தினகரன் அணியின் சிவகங்கை மாவட்டச் செயலாளராகச் செயல்படக்கூடியவர் முன்னாள் எம்.எல்.ஏ உமாதேவன். காரைக்குடி முன்னாள் எம்.எல்.ஏ சோழன்.பழனிச்சாமி திருப்பத்தூர்  பொதுக்குழு உறுப்பினர்கள் புஷ்பலீலா சிவகங்கை தேவதாஸ் சிவகங்கை முன்னாள் நகர்மன்ற தலைவர் அர்ச்சுணன் தேவகோட்டை காளையார்கோவில் சிங்கம்புணரி திருப்புவனம் மானாமதுரை திருப்பத்தூர் எஸ்.புதூர் கண்ணங்குடி சாக்கோட்டை இளையான்குடி கல்லல் ஆகிய ஒன்றியங்களில் இருந்து டி.டி.வி.தினகரன் அணிக்கு மாறியவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த நீக்கத்தால் அ.தி.மு.க-வினர் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

இந்தப் பதவி நீக்கம் குறித்து அ.தி.மு.க சிவகங்கை நகரச் செயலாளர் பேசும்போது, கட்சி சின்னம் எந்தப் பக்கம் இருக்கிறதோ அங்குதான் தொண்டர்கள் இருப்பார்கள். டி.டி.வி.தினகரன் பக்கம் போனவர்கள் ஏண்டா அணி மாறிப்போனோம் என்று வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்'' என்றார்.

சிவகங்கை முன்னாள் நகர் மன்றத் தலைவர் அர்ச்சுணன் பேசும்போது. ''அம்மா முன்னிலையில் கட்சியில் சேர்ந்தேன். என்னை நீக்க யாருக்கும் அதிகாரம் கிடையாது. சின்னம்மா தலைமையில் அ.தி.மு.க இனி வரும் காலங்களில் இயங்கும். தொண்டர்களும் எங்கள் பக்கம் தான் இருக்கிறார்கள். ஓ.பி.எஸ் இ.பி.எஸ் இருவரின் ஆட்சி முடிவுக்கு வரும்போது டி.டி.வி, சசிகலா பக்கம் வருவது உறுதி. இது நிச்சயம்''' என்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு