Published:Updated:

பிரதமர் பதவி வேட்பாளர்: ப.சிதம்பரத்தை காங். நிறுத்தும்?

பிரதமர் பதவி வேட்பாளர்: ப.சிதம்பரத்தை காங். நிறுத்தும்?
பிரதமர் பதவி வேட்பாளர்: ப.சிதம்பரத்தை காங். நிறுத்தும்?
பிரதமர் பதவி வேட்பாளர்: ப.சிதம்பரத்தை காங். நிறுத்தும்?

லண்டன்/புதுடெல்லி: 2014 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில்  மோடிக்கு எதிராக ப.சிதம்பரத்தை காங்கிரஸ் நிறுத்த அதிக வாய்ப்புள்ளதாக  லண்டனிலிருந்து வெளியாகும் ' தி எக்கனாமிஸ்ட்’ என்ற பத்திரிகை செய்தி  வெளியிட்டுள்ளது.

வருகிற 2014 ம் ஆண்டில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவின்  பிரதமர் வேட்பாளராக குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியை நிறுத்த அக்கட்சியில்  பலர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.குறிப்பாக பா.ஜனதா மூத்த தலைவர்களில்  ஒருவரும்,மக்களவை எதிர்கட்சித் தலைவருமான சுஷ்மா ஸ்வராஜ்,"பிரதமர் பதவிக்கு  மோடி மிகச் சிறந்த தகுதியுடையவர்” என்று இரு தினங்களுக்கு முன்னர்  வெளிப்படையாகவே அறிவித்தார்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் எதிர்கால பிரதமர் வேட்பாளராக கூறப்படும் ராகுல்  காந்தியை மத்திய அமைச்சரவையில் சேர பிரதமர் மன்மோகன் சிங் பலமுறை  கேட்டுக்கொண்டும்,அவர் அதனை ஏற்கவில்லை.

அதே சமயம் நேரடியாக பிரதமர் பதவியை ஏற்க அவர் விரும்புவதாலேயே,அமைச்சர்  பதவியை ஏற்க ராகுல் தயங்குவதாகவும் மற்றொரு தரப்பில் கூறப்படுகிறது.

ஆனால் ராகுல் காந்தி இன்னும் ஒரு தீவிர அரசியல்வாதிக்கான அணுகுமுறையை  கொண்டிருக்கவில்லை என்றும், பிரதமர் பதவியில் அமர வேண்டும் என்ற விருப்பம்  பெரிய அளவில் அவரிடம் காணப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ள அப்பத்திரிகை,  ராகுல் மிகவும் கூச்ச சுபாவமுடையவராக உள்ளார் என்றும், பத்திரிகையாளர்கள்,சக்தி  வாய்ந்த கூட்டணி கட்சித் தலைவர்கள், சுய சரிதை எழுதுபவர்கள் போன்றவர்களிடம்  பேசக்கூட அவர் தயங்குவதாகவும் தெரிவித்துள்ளது.

அத்துடன் நாடாளுமன்றத்தில் அவர் குரல் எழுப்புவதில்லை என்றும், ராகுலின் திறமை  உண்மையில் என்ன என்பதோ, ஒருவேளை அதிகாரத்தில் அமர்ந்தால் என்ன செய்ய  விரும்புகிறார் என்பதோ யாருக்கும் தெரியவில்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

##~~##
இத்தகைய காரணங்களாலும், பொருளாதார சிக்கல்களை திறம்பட எதிர்கொள்ளக்கூடிய  அனுபவம் உடையவர் என்பதாலும் தற்போதைய உள்துறை அமைச்சர்  ப.சிதம்பரம்,அடுத்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக  நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் பிரதமர் மன்மோகன் சிங்  ஆகியோரது நம்பிக்கைக்கு உரியவர்களாக சிதம்பரம் இருப்பதால்,இதற்கான வாய்ப்பு மிக  மிக அதிகமாக உள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.