Published:Updated:

காவிரி நீர் திறக்க எதிர்ப்பு: மைசூர், மாண்டியாவில் பந்த்

காவிரி நீர் திறக்க எதிர்ப்பு: மைசூர், மாண்டியாவில் பந்த்
காவிரி நீர் திறக்க எதிர்ப்பு: மைசூர், மாண்டியாவில் பந்த்
காவிரி நீர் திறக்க எதிர்ப்பு: மைசூர், மாண்டியாவில் பந்த்

மைசூர்/சத்தியமங்கலம்: உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்திற்கு காவிரி நீர்திறக்க  எதிர்ப்பு தெரிவித்து மைசூர் மற்றும் மாண்டியாவில் இன்று முழு அடைப்பு போராட்டம்  நடைபெற்று வருகிறது.

காவிரி நீர் பிரச்னை தொடர்பான வழக்கை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம்,   தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என   கர்நாடகத்துக்கு உத்தர விட்டது. ஆனால் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடக் கூடாது  என்று கர்நாடக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
 
இது தொடர்பாக  மைசூர், மாண்டியா மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டமும்  அறிவித்துள்ளனர்.இதனால் அந்த 2 மாவட்டங்களிலும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை  விடப்பட்டுள்ளன.பந்த் காரணமாக அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது.

மைசூர் மற்றும் மாண்டியா மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் கன்னட  அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஆங்காங்கே, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் டயர்களை கொளுத்தியும்,சாலை  மறியலில் ஈடுபட்டும் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.

வாகன போக்குவரத்து நிறுத்தம்

இந்த போராட்டம் காரணமாக ஈரோடு மாவட்டத்திலிருந்து கர்நாடகா செல்லும் பஸ்கள்  இன்று காலை

காவிரி நீர் திறக்க எதிர்ப்பு: மைசூர், மாண்டியாவில் பந்த்

முதல் நிறுத்தப்பட்டன.
 
ஈரோடு மற்றும் சத்தியமங்கலத்திலிருந்து திம்பம், ஆசனூர்,  தாளவாடி வழியாக  கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர், மைசூர், கொள்ளேகால் மற்றும் பெங்களூருக்கு   தினமும் 21 பஸ்கள்  செல்கிறது. இந்த பஸ்கள் இன்று முதல் செல்லவில்லை.  மேலும் சில பஸ்கள் தமிழக-கர்நாடக எல்லைப் பகுதியான புனிஞ்சூர் வரை சென்று  திரும்பி விடுகிறது.
 
இதேபோல் கர்நாடக மாநிலத்திலிருந்து ஈரோடு மாவட்டத்துக்கு 18 பஸ்கள் தினமும்  வரும்.  இந்த பஸ்களும் இன்று முதல் நிறுத்தப்பட்டு உள்ளது. இதில் சில பஸ்கள்  மட்டும் எல்லை பகுதியான புளிஞ்சூர் வரை வந்து திரும்பி விடுகிறது. 
 
ஈரோடு மாவட்டம் திம்பம்-ஆசனூர் வனப்பகுதி வழியாக கர்நாடக மாநிலத்துக்கு செல்லும்  லாரிகள், வேன்களும் நேற்று நள்ளிரவு முதல் நிறுத்தப்பட்டன.

சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி செக்போஸ்டில் லாரிகள் வரிசையாக  நிறுத்தப்பட்டுள்ளன. இதேபோல் கர்நாடக மாநிலத்திலிருந்து தமிழகம் வரும் லாரிகளும்  ஓடவில்லை. இந்த லாரிகள் மேலே மலைப்பகுதியான ஆசனூர் சோதனை சாவடியில்  நிறுத்தப்பட்டு உள்ளன.