Published:Updated:

அன்னிய முதலீடு: மாநிலங்களவையிலும் அரசுக்கு மாயாவதி ஆதரவு!

அன்னிய முதலீடு: மாநிலங்களவையிலும் அரசுக்கு மாயாவதி ஆதரவு!
அன்னிய முதலீடு: மாநிலங்களவையிலும் அரசுக்கு மாயாவதி ஆதரவு!

அன்னிய முதலீடு: மாநிலங்களவையிலும் அரசுக்கு மாயாவதி ஆதரவு!

அன்னிய முதலீடு: மாநிலங்களவையிலும் அரசுக்கு மாயாவதி ஆதரவு!

புதுடெல்லி: சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடை அனுமதிக்கும்  விவகாரத்தில், மாநிலங்களவையில் மத்திய அரசுக்கு ஆதரவு அளிப்பதாக பகுஜன் சமாஜ்  கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடை அனுமதிப்பதை எதிர்த்து கொண்டுவரப்பட்ட  தீர்மானம் மக்களவையில் நேற்று, விவாதத்திற்கு பின்னர் தோற்கடிக்கப்பட்டது.

அன்னிய முதலீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்த போதிலும், மக்களவையில் நடைபெற்ற  வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் மத்திய அரசை மாயாவதியின் பகுஜன் சமாஜ்  கட்சியும், முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாதி கட்சியும் மறைமுகமாக காப்பாற்றின.

ஆனால் மாநிலங்களவையில் எதிர்த்து வாக்களிக்கப்போவதாக இரு கட்சிகளும்  அறிவித்ததால், மக்களவையை போன்று மாநிலங்களவையிலும் அரசு அத்தனை  சுலபத்தில் வெற்றி பெற முடியாத நிலை காணப்பட்டது.

##~~##
குறிப்பாக பதவி உயர்வில் தாழ்த்தப்பட்ட மற்றும்  பழங்குடியின வகுப்பினருக்கு  இடஒதுக்கீடு அளிக்க கோரும் மசோதாவை நிறைவேற்ற உத்தரவாதம் கோரிய  மாயாவதி,இதைப்பொறுத்தே மாநிலங்களவையில் அரசுக்கு தனது ஆதரவு அமையும்  என்று கூறி இருந்தார்.
இந்நிலையில் இது தொடர்பான விவாதம் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி  முதலீட்டை எதிர்க்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தை, மாநிலங்களவையில் அதிமுக  எம்பி மைத்ரேயன், இன்று தொடங்கி வைத்துப் பேசினார்.
அவரைத் தொடர்ந்து பல்வேறு கட்சி உறுப்பினர்களும் பேசினர்.மாநிலங்களவை  எதிர்க்கட்சி தலைவர் அருண் ஜெட்லி, காங்கிரஸ் கூட்டணி கட்சிகளே அன்னிய  முதலீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதை சுட்டிக் காட்டினார்.மத்திய அரசு பெரும்பான்மை  இழந்து செயலற்று இருப்பதாக அருண் ஜெட்லி குற்றம்சாட்டினார்.
பா.ஜனதா - பகுஜன் சமாஜ் மோதல்
இந்நிலையில் இந்த விவாத்தில் கலந்து கொண்ட பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர்  மாயாவதி, சிபிஐ விசாரணைக்கு அஞ்சியே வாக்கெடுப்பை பகுஜன் சமாஜ் கட்சி  புறக்கணித்ததாக சுஷ்மா ஸ்வராஜ் கூறியதை மறுத்தார். மேலும் சிபிஐ-க்கு அஞ்சி  நாங்கள் ஓடி ஒளிந்தது இல்லை என்றும், சிபிஐ அமைப்பை தவறாகப்  பயன்படுத்தியவர்கள் பா.ஜனதா கட்சி தான் என்றும் குற்றம் சாட்டினார்.
அதனைத் தொடர்ந்து, தனது உரையின் இறுதியில் அன்னிய முதலீடு விவகார  தொடர்பான வாக்கெடுப்பில் மத்திய அரசுக்கு ஆதரவாக தமது கட்சி ஆதரவு அளிக்கும்  என்று அறிவித்தார்.இதனால் மத்திய அரசு சற்று நிம்மதி அடைந்துள்ளது.
 
அடுத்த கட்டுரைக்கு