Published:Updated:

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது: கர்நாடக முதல்வர் திட்டவட்ட ம்

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது: கர்நாடக முதல்வர் திட்டவட்ட ம்
தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது: கர்நாடக முதல்வர் திட்டவட்ட ம்
தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது: கர்நாடக முதல்வர் திட்டவட்ட ம்

பெங்களூரு: கர்நாடகாவின் நிலைமையைக் கருத்தில் கொண்டு, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்து விட முடியாது என்று கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இன்று  நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், கர்நாடகாவில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக, தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட முடியாது என்றார்.

முன்னதாக காவிரி நீர் பிரச்னை தொடர்பாக தமிழகம் தொடர்ந்த வழக்கை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம், காவிரியிலிருந்து தமிழகத்திற்கு உடனடியாக வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீரை திறக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது.

அத்துடன் வருகிற 9 ஆம் தேதி வரை இந்த தண்ணீரை திறக்க வேண்டும் என உத்தரவிட்டதோடு, வருகிற வெள்ளிக்கிழமையன்று காவிரி கண்காணிப்பு குழு கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றும் கூறியிருந்தது.

கலங்கி நிற்கும் விவசாயிகள்

இந்நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவையும் மதிக்கப்போவதில்லை என்று கர்நாடக முதல்வர் கூறிவிட்ட நிலையில்,இப்பிரச்னையில் மத்திய அரசு தலையிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

காவிரி கண்காணிப்பு குழு முன்னர் பிறப்பித்த உத்தரவையும், நேற்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் கர்நாடக அரசு மதிக்காத நிலையில், காவிரி பாயும் பகுதிகளில் உள்ள அணைகளின் கட்டுப்பாட்டை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு,தமிழகத்திற்கு நியாயமான தண்ணீர் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே காவிரி பாசன விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ஆனால் நமது பிரதமர் அந்த அளவுக்கு தைரியமாக செயல்படுவார் என்பது சந்தேகமே என்பதால்,இப்பிரச்னையில் உச்ச நீதிமன்றம் மீண்டும் தலையிட்டு, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுவதற்குள், ஏற்கனவே காய்ந்துபோய்விட்ட பயிர்கள் தீய்ந்து  போய்விடுமோ என்று காவிரி பாசன விவசாயிகள் கலக்கமடைந்துள்ளனர்.

ஒருவேளை வருண பகவான் கைகொடுத்தால் கருகும் பயிர்களை காப்பாற்ற முடியும்.ஆனால் தமிழக காவிரி பாசன பகுதிகளில் மழையும் இதோ...அதோ... என தலைகாட்டுகிறதே தவிர ஓங்கி அடித்தபாடில்லை.

கலங்கி நிற்கிறாகள் காவிரி டெல்டா பாசன விவசாயிகள்...!