Published:Updated:

தடைகளை தகர்த்து சோனியா காந்தி சாதனை: கருணாநிதி வாழ்த்து

தடைகளை தகர்த்து சோனியா காந்தி சாதனை:  கருணாநிதி வாழ்த்து
தடைகளை தகர்த்து சோனியா காந்தி சாதனை: கருணாநிதி வாழ்த்து
தடைகளை தகர்த்து சோனியா காந்தி சாதனை:  கருணாநிதி வாழ்த்து

சென்னை:  ஏராளமான தடைகளையும், இடைஞ்சல்களையும் சந்தித்தாலும், அவற்றை  தவிடுபொடியாக்கி சாதனை படைத்து வருவதாக சோனியா  காந்திக்கு அனுப்பியுள்ள பிறந்த நாள் வாழ்த்துச் செய்தியில் கருணாநிதி கூறியுள்ளார்.  

காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி நாளை தனது பிறந்தநாளைக் கொண்டாட  உள்ள நிலையில், அவருக்கு திமுக தலைவர் கருணாநிதி அனுப்பியுள்ள பிறந்த நாள்  வாழ்த்துச் செய்தியில்,"ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவராக இருக்கும்  தாங்கள், ஏராளமான தடைகளையும், இடைஞ்சல்களையும் சந்தித்தாலும், அவற்றை  தவிடுபொடியாக்கி சாதனை படைத்து வருகின்றீர்கள்.

##~~##
தடைக் கற்களை படிக்கட்டுகளாக மாற்றியிருப்பதே மிகப்பெரிய வெற்றியாகும். இந்த  அசாதாரண சூழ்நிலையில், மத்தியில், பாதுகாப்பான, நிலையான ஆட்சியை  தங்களால்தான் தர முடியும் என்று மக்கள் நினைக்கின்றனர்.
இதுவரை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி செய்துள்ள சாதனைகள்,  ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் அனைத்தும் வெகுவாகக் கவர்கின்றன. ஏழை மற்றும்  நடுத்தர மக்களின் நலனுக்காகவும்,அவர்களது வாழ்வாதாரத்துக்காகவும் நீங்கள் காட்டும்  ஆர்வத்தை அனைத்து மக்களும் உணர்ந்துள்ளனர்.
இந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுக சார்பில், நீங்கள் நீண்ட ஆயுளைப் பெற்று  மகிழ்ச்சியோடும்,ஆரோக்கியத்தோடும் வாழ பிறந்தநாளன்று வாழ்த்துகிறேன்" என்று  கூறியுள்ளார்.