Published:Updated:

புதிய கட்சி தொடங்கினார் எடியூரப்பா; பா.ஜ. அரசுக்கு நெருக்கடி!

புதிய கட்சி தொடங்கினார் எடியூரப்பா; பா.ஜ. அரசுக்கு நெருக்கடி!
புதிய கட்சி தொடங்கினார் எடியூரப்பா; பா.ஜ. அரசுக்கு நெருக்கடி!
புதிய கட்சி தொடங்கினார் எடியூரப்பா; பா.ஜ. அரசுக்கு நெருக்கடி!

பெங்களூரு:கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா, 'கர்நாடக ஜனதா' என்ற தனது புதிய கட்சியை துவக்கியுள்ளார்.இவரது கட்சி மாநாட்டில் ஆளும் பா.ஜனதா எம்எல்ஏக்கள் 21 பேர் பங்கேற்றதால் கர்நாடக அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

கர்நாடக பா.ஜனதாவிலிருந்து எடியூரப்பா ஆதரவாளர்களை, அக்கட்சி தலைமை ஒவ்வொருவராக நீக்கி வருகிறது.

இந்நிலையில்,கர்நாடக மாநிலம் ஹவேரியில் நேற்று நடைபெற்ற பிரமாண்ட விழாவில் குத்துவிளக்கேற்றி எடியூரப்பா தனது கட்சியை துவக்கினார்.

புதிய கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற எடியூரப்பா, ஜெகதிஷ் ஷெட்டருக்கு துணிவிருந்தால், ராஜினாமா செய்துவிட்டு தேர்தலை சந்திக்குமாறு சவால் விடுத்தார்.

தேர்தலுக்கு இன்னும் சிலமாதங்களே உள்ள நிலையில், புதிய கட்சி துவக்கப்பட்டிருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. எடியூரப்பாவின் கட்சி தொடக்க விழாவில் சுமார் ஒரு லட்சம் பேர் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

##~~##
இந்த விழாவில் பா.னதா கட்சி எம்.எல்.ஏ.க்கள் 21 பேர் உட்பட அக்கட்சி பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.இதனால் கர்நாடக அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 
பா.ஜனதாவின் பலம்
224 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவையில் பேரவைத் தலைவர் கே.ஜி.போப்பையா, சுயேச்சை உறுப்பினர் வர்த்தூர் பிரகாஷ் நீங்கலாக, பா.ஜனதாவுக்கு 118 உறுப்பினர்கள் உள்ளனர்.
இந்த நிலையில், எடியூரப்பாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள உறுப்பினர்களை தவிர்த்து கணக்கிட்டால், சட்டப்பேரவையில் பா.ஜ.வின் உண்மையான பலம் 97 ஆகக் குறைகிறது. சட்டப்பேரவையில் பெரும்பான்மைக்கு 113 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. எடியூரப்பாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள 21 எம்.எல்.ஏ.க்களும் இன்னமும் பா.ஜ. எம்.எல்.ஏ.க்களாகவே உள்ளதால், ஆளும் கட்சிக்கு சட்டப்பேரவையில் அறுதிப் பெரும்பான்மை பலம் இருந்தாலும், தார்மிக ரீதியாக அது பெரும்பான்மையை இழந்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
சட்டப்பேரவைக் கூட்டம் பெல்காமில் தற்போது நடைபெற்று வருவதால், எதிர்க்கட்சிகள் இது தொடர்பாக இன்று பிரச்னை எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒழுங்கு நடவடிக்கை
இதற்கிடையே, அரசு கவிழ்ந்தாலும் பரவாயில்லை;எடியூரப்பாவுக்கு ஆதரவளிக்கும் எம்.எல்.ஏ.க்கள் மீது கண்டிப்பாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதல்வரும், பா.ஜ. மாநிலத் தலைவருமான கே.எஸ். ஈஸ்வரப்பா தெரிவித்துள்ளார்.