Published:Updated:

எடியூரப்பாவின் கட்சியால் நெருக்கடி: தேர்தலை சந்திக்க பா.ஜ. முடிவு/

Vikatan Correspondent
எடியூரப்பாவின் கட்சியால் நெருக்கடி: தேர்தலை சந்திக்க பா.ஜ. முடிவு/
எடியூரப்பாவின் கட்சியால் நெருக்கடி: தேர்தலை சந்திக்க பா.ஜ. முடிவு/
எடியூரப்பாவின் கட்சியால் நெருக்கடி: தேர்தலை சந்திக்க பா.ஜ. முடிவு/

பெங்களூரு: கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா புதிய கட்சி தொடர்ந்ததை  அடுத்து. கர்நாடக அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் சட்டசபையை  கலைத்துவிட்டு,தேர்தலை சந்திக்கலாமா என பா.ஜனதா பரிசீலித்து வருவதாக   தகவல்கள் வெளியாகியுள்ளன.

பா.ஜனதா கவிலிருந்து விலகிய எடியூரப்பா 'கர்நாடக ஜனதா' என்ற தனது கட்சியை  நேற்று தொடங்கினார்.இதில் ஆளும் பா.ஜனதா கட்சியை சேர்ந்த 14 எம்.எல்.ஏக்கள்  கலந்து கொண்டனர்.

பின் அவர் அளித்த விருந்தில் 21 எம்.எல்.ஏக்கள். 4 எம்.பிக்கள் கலந்து கொண்டனர்.

##~~##
 இதனைத் தொடர்ந்து தமது ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறும் ஜெகதீஷ்  ஷெட்டர் தைரியம் இருந்தால் சட்டப்பேரவையை கலைத்து விட்டு தேர்தலை சந்திக்க  தயாரா? என்று எடியூராப்பா கேள்வி எழுப்பினார்.
மொத்தம் உள்ள 118 பா.ஜ.க எம்.எல்.ஏக்களில் எடியூரப்பாவிற்கு 50க்கும் மேற்பட்ட  எம்.எல்.ஏக்களின் ஆதரவு உள்ளதால் ஆளும் பா.ஜனதா அரசுக்கு நெருக்கடி  ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சட்டசபையில் பா.ஜனதா அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க  வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.

மேலும்  பெருபான்மை பலத்தை இழந்துவிட்டதால் கர்நாடக  அரசை கலைக்கக் கோரி, ஆளுநரிடம் மனு அளிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் சட்டசபையை கலைத்துவிட்டு,தேர்தலை சந்திக்கலாமா என கர்நாடக மாநில  பா.ஜனதா பரிசீலித்து வருவதாகவும்,இன்னும் 2 அல்லது 3 தினங்களில் சட்டசபை  கலைக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.