Published:Updated:

'வால்மார்ட்'டை தடுக்க வேண்டும் : கருணாநிதி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
'வால்மார்ட்'டை தடுக்க வேண்டும் : கருணாநிதி
'வால்மார்ட்'டை தடுக்க வேண்டும் : கருணாநிதி

'வால்மார்ட்'டை தடுக்க வேண்டும் : கருணாநிதி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

'வால்மார்ட்'டை தடுக்க வேண்டும் : கருணாநிதி

சென்னை: சென்னை வானகரம், அண்ணாநகரில் வால்மார்ட் நிறுவனத்தின் வணிக  வளாகம், மாக்கெட்டிங் அலுவலகம் தொடங்கி அதற்கான பணிகள் நடந்து வருவதாக  வரும் செய்தி உண்மையா என்பதை அறிந்து, உடனடியாக அதன் மீது தமிழக அரசு தக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள கேள்வி பதில் அறிக்கையில்,கூறியிருப்பதாவது:

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டினை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த  மாட்டோம் என்று தமிழக முதல்வர் திட்டவட்டமாக தெரிவித்த போதிலும், வால்மார்ட்  நிறுவனம் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டினை தமிழகத்தில் கொண்டு  வருவதற்கான முயற்சியினை மேற்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறதே?  

வானகரத்தில் வால்மார்ட்  நிறுவனத்தின் சார்பில் ஏழு ஏக்கர் பரப்பளவில் வணிக  வளாகமும், அண்ணா நகரில் மாக்கெட்டிங் அலுவலகமும் தொடங்கி அதற்கான பணிகள்  நடைபெறுவதாக தகவல்கள் வருகின்றன. மளிகைக் கடைக்காரர்களை அணுகி குறைந்த  விலையில் உங்களுக்கு பொருள்களை விநியோகிக்கிறோம் என்று கூறி,  அவர்களை  உறுப்பினர்களாக ஆக்குவதற்கான முயற்சியில் தீவிரமாக அந்த நிறுவனம் ஈடுபட்டு  வருகிறதாம். தமிழக அரசு இந்தச் செய்தி உண்மையா என்பதை அறிந்து, உடனடியாக  அதன் மீது தக்க நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன்.   

கலைஞர், எம்.ஜி.ஆர். போல சுமூகமாகப் பேசி கர்நாடக அரசிடம் தண்ணீர் பெற  முதல்வர் ஜெயலலிதா முயற்சிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த்,  சொல்லியிருக்கிறாரே?

இதற்காக அவர் மீது ஓர் அவதூறு வழக்கு வந்துவிடப் போகிறது! ஏனென்றால் அக்டோபர்  14ம் தேதியன்று அவர் ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டிக்காக நேற்றைய தினம்  ஒரு அவதூறு வழக்கினை இந்த அரசு அவர் மீது தொடுத்துள்ளது.

##~~##
வைர விழாவில் கலந்து கொண்டு பேசிய அனைவருடைய பேச்சுக்களையும் அதிமுக அரசு  செய்தி வெளியீடாக அனுப்பிய போதிலும், முக்கிய விருந்தினரான குடியரசு தலைவரின்  உரையை அனுப்பவில்லையாமே?
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேசும்போது தமிழகச் சட்டப்பேரவையில் ஐந்து முறைக்கு  மேல் நான் முதல் அமைச்சராக இருந்ததைப் பற்றியும், தொடர்ந்து 60 ஆண்டு  காலத்திற்கு மேல் நான் சட்டமன்றத்தில் ஆற்றிய பணி பற்றியும் பேசி விட்டாரே; அந்தப்  பேச்சினை எப்படி வெளியிடலாம் என்று கருதியிருக்கலாம். அது மாத்திரமல்ல;   1997ம் ஆண்டு தி.மு.கழக ஆட்சியில் நடைபெற்ற சட்டப்பேரவை வைர விழாவின்  போது, எதிர்க்கட்சித் தலைவரை விழாவில் பேசுவதற்கு வாய்ப்பு அளித்ததோடு, வைர  விழா மலரிலும் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த  சோ.பாலகிருஷ்ணன் முழுப்பக்கப் படம் இடம் பெற்றிருந்தது. ஆனால் இப்போது  வெளியிட்டுள்ள விழா மலரில் எதிர்க்கட்சித் தலைவரின் படம் மட்டும் விடப்பட்டுள்ளது.  என்னே பெருந்தன்மை!
திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினரை பழிவாங்க, பொய்ப் புகார் என்ற போதிலும் உடனடி  நடவடிக்கை
'வால்மார்ட்'டை தடுக்க வேண்டும் : கருணாநிதி
எடுக்கின்ற ஜெயலலிதா அரசின் காவல் துறை; அதிமுக வினர் மீது புகார்  நடவடிக்கை எடுக்க சுணக்கம் தெரிவிக்கிறதே?
அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மீது, சென்னை சூளைமேட்டை சேர்ந்த  என்.மோகன் என்பவர்; தன்னுடைய நிலத்தை அபகரித்து விட்டதாக காவல்  துறையினரிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவித்து உயர்  நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதுபோலவே அமைச்சர் ஒருவரும், அவருடைய  தம்பியும் சேர்ந்து கோகுல் என்பவரைக் கடத்திச் சென்று, அவரிடம் நிலம் அபகரித்தது  பற்றி, அந்தக் கோகுல் நீதிமன்றத்திலே வாக்குமூலம் கொடுத்து, நீதிமன்றமே காவல்  துறையினர் சுணக்கம் காட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
மூன்றாவதாக, திருச்சி அரசு மருத்துவமனையில் டாக்டராகப் பணிபுரிபவர் ராணி.  அதிமுக எம்.எல்.ஏ.வாக இருந்த பரஞ்சோதி, 2008ம் ஆண்டு அவரை கோவிலில்  வைத்து திருமணம் செய்து கொண்டதாகவும், தேர்தல் செலவுக்காக 60 பவுன் நகை  மற்றும் சொத்துக்களைப் பெற்று ஏமாற்றி விட்டதாகவும், உள்ளூர் காவல் நிலையம்  முதல் தமிழக முதல்வர் வரை புகார் செய்தும் நடவடிக்கை இல்லாததால் நீதிமன்றம்  மூலம் பரஞ்சோதி மீது  வழக்குப் பதிவு செய்ய உத்தரவு பெற்று, 2011 டிசம்பர் 6ம்  தேதி திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீசார் அவர் மீது 7 பிரிவுகளில்  வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் எப்.ஐ.ஆர்.தாக்கல் செய்தனர்.அதன் பிறகு வழக்கு  விசாரணைக்கு வரும்போதெல்லாம் போலீசார் வாய்தா வாங்குகிறார்கள்.
இவ்வாறு அதில் கருணாநிதி கூறியுள்ளார்.
 
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு