Published:Updated:

காவிரி: கர்நாடகத்திற்கு உத்தரவு!

காவிரி: கர்நாடகத்திற்கு உத்தரவு!
காவிரி: கர்நாடகத்திற்கு உத்தரவு!
காவிரி: கர்நாடகத்திற்கு உத்தரவு!

புதுடெல்லி: தமிழகத்திற்கு 12  டிஎம்சி தண்ணீரரை திறந்துவிட வேண்டும் என்ற  காவிரி கண்காணிப்பு குழுவின் உத்தரவை செயல்படுத்த வேண்டும் என்று கர்நாடக மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி டெல்லியில் கடந்தவாரம் நடைபெற்ற காவிரி கண்காணிப்பு  குழு  கூட்டத்தில்,தமிழகத்திற்கு 12 டிஎம்சி தண்ணீரரை,டிசம்பர் மாதத்திற்குள்  திறந்துவிட வேண்டும் என கர்நாடக அரசுக்கு  காவிரி கண்காணிப்பு குழு உத்தரவிட்டது.

இந்நிலையில் காவிரி நீர் தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்திருந்த வழக்கு, உச்ச  நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது

அப்போது கருகும் சம்பா பயிர்களை காப்பாற்ற உடனடியாக கர்நாடகம் உடனடியாக  தண்ணீர் திறந்துவிட உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் கோரிக்கை  விடுக்கப்பட்டது.

தமிழகத்திற்கு அறிவுறுத்தல்

ஆனால் அதனை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், உடனடியாக தண்ணீர் திறக்குமாறு  கர்நாடகத்திற்கு உத்தரவிட முடியாது என்றும்,மிகவும் அவசரம் என்றால் தமிழக அரசு  இக்கோரிக்கை தொடர்பாக மீண்டும் காவிரி கண்காணிப்பு குழுவை அணுகலாம் என்றும்  அறிவுறுத்தியது.