Published:Updated:

பிரதமர் மோடி எல்லை தாண்டிப் பேசுகிறார் - வைகோ கடும் விமர்சனம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பிரதமர் மோடி எல்லை தாண்டிப் பேசுகிறார் - வைகோ கடும் விமர்சனம்
பிரதமர் மோடி எல்லை தாண்டிப் பேசுகிறார் - வைகோ கடும் விமர்சனம்

பிரதமர் மோடி எல்லை தாண்டிப் பேசுகிறார் - வைகோ கடும் விமர்சனம்

சாகித்யஅகடாமி விருதுபெற்ற மறைந்த எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமியின் நினைவேந்தல் நிகழ்ச்சி, விருதுநகர் மாவட்டம் ஆலங்குளத்தில் இன்று இரவு நடந்தது. அதில் கலந்துகொள்ள வந்த ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் பேசும்போது, 'புகழ்மிக்க மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் வணிகக் கடைகள் அமைக்கக் கூடாது என்ற மதுரை ஆதினத்தின் கருத்து பரிசீலனைசெய்யப்பட வேண்டும். ஆலயங்களில் இதுபோன்ற விபத்துக்களைத் தவிர்க்கும் வகையில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்ய வேண்டும். பாரதிய ஜனதா தலைமையில் சங்கபரிவார் கூட்டங்கள், இந்திய ஜனநாயகத்தின் அடிப்படையைத் தகர்த்து, மதச்சார்பின்மை என்ற மக்களாட்சியைத் தகர்த்து, ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாசாரம் என்ற ஆபத்தான இலக்கை நோக்கி இந்திய இறையாண்மைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் வேட்டு வைக்கும் வகையில்  போய்க்கொண்டிருக்கிறது.

மதச்சார்பின்மையை எதிர்ப்பவர்கள், இடதுசாரி முற்போக்கு சக்திகள் அனைவரும் அரசியல் களத்தில் ஒன்றிணைந்து,மோடி தலைமையிலான அரசை அடியோடு வீழ்த்தும் பணியில் ஈடுபட வேண்டும். கர்நாடகத்துக்குச் சென்று, காங்கிரஸ் இல்லாத கர்நாடகத்தை உருவாக்குவேன் என்று பிரதமர் மோடி எல்லை தாண்டிப் பேசுகிறார். மாநிலத் தேர்தலையும்  நாடாளுமன்றத் தேர்தலையும் ஒரே நேரத்தில் நடத்தத் திட்டமிடுவது மோசடியானது. இல்லாத ஊருக்கு போகாத வழியைக் காட்டும் மோடியின் அரசை அனைவரும் கடுமையாக எதிர்க்க வேண்டும்' என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு