Published:Updated:

புதிய இணையதளம் துவங்கினார் கமல்ஹாசன்!

புதிய இணையதளம் துவங்கினார் கமல்ஹாசன்!
புதிய இணையதளம் துவங்கினார் கமல்ஹாசன்!

நடிகர் கமல்ஹாசன் இந்த மாதம் தீவிர அரசியலில் களமிறங்கவுள்ளார். அதற்கு முன்னதாக அவர் அமெரிக்காவில் பலவேறு துறை சார்ந்த நிபுணர்களிடம் பேசி வருகிறார். இன்று அமெரிக்காவின் ஹார்வார்டு பல்கலைக்கழகத்திலும் உரையாற்றினார்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தை தொடர்ந்து, கமலும் புதிய இணையதளம் ஒன்றை துவங்கிவுள்ளார். 'நாளை நமதே'  எனப்பெயரிடப்பட்டுள்ள இந்த இணையதளத்தில் உறுப்பினராக பதிவு செய்துகொள்ளலாம். ரசிகர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினர் இணையும் வகையில் இணையதளத்தை தொடங்கியுள்ளார். இந்த மாதம் கமல் மக்களை சந்திக்கும் திட்டத்துக்கும் ’நாளை நமதே’ என்று தான் பெயரிட்டிருந்தார்.

இணையதளத்தின் முதல் பக்கத்தில், ”கிராமியமே நம் தேசியம் என்றால் நாளை நமதே” என கூறப்பட்டுள்ளது. மேலும் புதிய தமிழ்நாடு உங்களிடம் இருந்து துவங்குகிறது, அனைவரும் கூடிக் தேரை இழுத்தால் நாளை நமதே”  போன்ற வாசகங்களும் இடம் பெற்றுள்ளது.