Published:Updated:

மின்வெட்டை கண்டித்து டிச.18 ல் போராட்டம் : திமுக அறிவிப்பு

மின்வெட்டை கண்டித்து டிச.18 ல்  போராட்டம் : திமுக அறிவிப்பு
மின்வெட்டை கண்டித்து டிச.18 ல் போராட்டம் : திமுக அறிவிப்பு
மின்வெட்டை கண்டித்து டிச.18 ல்  போராட்டம் : திமுக அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் நிலவி வரும் கடும் மின்வெட்டை கண்டித்து, இம்மாதம் 18ம் தேதி  அறபோராட்டம் நடத்தப்படும் என்று திமுக அறிவித்துள்ளது.

சென்னையில் இன்று நடைபெற்ற திமுக செயற்குழு கூட்டத்தில் கூட்டத்தில் மின்சார வெட்டு குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் பங்கேற்ற தி.மு.க. மாவட்ட செயலாளர் தங்கள் பகுதியில் நிலவும் மின்வெட்டு குறித்தும் அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து விளக்கினார்கள்.

அதனைத் தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மின்வெட்டு தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில்,"மின்வெட்டு காரணமாக தமிழகத்தின் பொருளாதாரம் வெகு வேகமாக பின்நோக்கி இழுத்துச் செல்லப்படும் கொடுமையை மக்களின் கவனத்துக்கு எடுத்துச் சென்று ஜனநாயக ரீதியாக தி.மு.க. சார்பில் எதிர்ப்புகளை தெரிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வரலாறு காணாத மின்வெட்டை கண்டித்து வருகிற 18-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) மாவட்ட தலைநகரங்கள், நகர ஒன்றியப் பேரூராட்சி போன்ற பகுதிகளில் அறப்போர் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று செயற்குழு முடிவு செய்துள்ளது" என்று கூறப்பட்டிருந்தது.

கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்த திமுக தலைவர் கருணாநிதி, தொடர்ந்து அளித்த பேட்டியில் கூறியதாவது:

திமுக. அறப் போராட்டம் எப்படி இருக்கும்?

அறப்போராட்டம் ஒவ்வொரு மாவட்டம் சுற்றுப்புற பகுதிகளில் நடக்கிறது. சட்டம் ஒழுங்குக்கு கட்டுப்பட்டு ஆர்ப்பாட்டம் நடக்கும். குக்கிராமங்களில் கூட ஆங்காங்கு இருக்கின்ற தொண்டர்கள் இதில் கலந்து கொள்வார்கள்.

சென்னையில் நடக்கும் போராட்டத்தில் நீங்கள் கலந்து கொள்வீர்களா?

இதுபற்றி முடிவு எடுக்க வில்லை.

எம்.ஜி.ஆர். சமாதியில் இரட்டை இலை சின்னம் அரசின் சார்பில் வைக்கப்பட்டுள்ளதே?

இதுபற்றி வழக்கு நடந்து கொண்டு இருக்கிறது. இப்போது இதுபற்றி சொல்வதற்கில்லை.

வால்மார்ட் அலுவலகம் அண்ணா நகரில் இயங்குவதற்கு இடம் ஒதுக்கப்பட்டு உள்ளதே?

தீர்மானங்களில் இது பற்றி தெளிவாக சொல்லி இருக்கிறோம்.

மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.க. தமிழகத்துக்கு மின்சாரத்தை பெற்று தரலாமே?

வேறு மாநிலங்களில் இருந்து மின்சாரத்தை கொண்டு வருவதற்கு வழித்தடங்கள் இல்லை. மத்தியில் இருந்த முந்தைய ஆட்சியாளர்கள் அதற்கான ஏற்பாடுகளை செய்து இருக்க வேண்டும்.

மத்திய அரசிடம் தமிழக அரசு மின்சாரம் கேட்டு இருக்கிறது. அதை நீங்கள் வலியுறுத்துவீர்களா?

தமிழ்நாட்டு நலனுக்காக திமுக. எதையும் செய்யும். அதற்கான சூழ்நிலை உருவானால் திமுக. அதில் பங்கெடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.