Published:Updated:

டாக்டர் விகடன்

விகடன் விமர்சனக்குழு

அன்பிற்கினிய வாசகரே,

விகடனின் அன்பான வணக்கங்கள்.

விகடன் இன்று கலை, இலக்கியம், அரசியல், வரலாறு, விளையாட்டு, பொழுதுபோக்கு, இயற்கையியல், பொருளாதாரம், தொழில்நுட்பம், சிறுவர் இலக்கியம் என எட்டுத்திக்கிலும் கிளைபரப்பி உலகத் தமிழர்களின் உன்னதத் தோழனாய் வலம் வருகிறது.
 
இதற்கு  உறுதுணையாய் நிற்கும் உங்களுக்கு விகடனாரின் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.

விகடன்.காமில் விகடன் குழும இதழ்கள் மட்டுமின்றி, உங்களுக்காகவே வேறு  தலைப்புகளிலும் சில சேவைகளை அளித்துக் கொண்டிருப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

நடக்கும் நிகழ்வுகளை உங்களுக்கு சுடச்சுட அள்ளித் தர ' விகடன் செய்திகள் '
இளமைத் துள்ளலுக்கும், நாளைய நம்பிக்கைக்கும் ' யூத்ஃபுல் விகடன் ' 
கலகலப்பான, கலக்கலான சினிமா செய்திகளுக்கு ' சினிமா விகடன் '

இவைகளைத் தொடர்ந்து,  உங்களுக்கென வழங்குகிறோம் ' டாக்டர் விகடன் '

உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பேணவும், வந்த நோய்களை விரட்டி, பிணிகள் ஏதும் வரும் முன் காத்து  வாழ்க்கையை பூரணமாக வாழவும் ' டாக்டர் விகடன் ' உங்களுக்கு தோள் கொடுப்பான்.

எளிமையான நடையில், தேவையான தகவல்களை அள்ளித் தர வருகிறோம்.

வாருங்கள்.. இணையம் வழியே இதயம் இணைவோம்.!