Published:Updated:

ஓமந்தூரார் படம் வைக்க இடமில்லை என்றவர்கள், ஜெயலலிதாவுக்கு இடம் ஒதுக்கியது எப்படி...? 

ஓமந்தூரார் படம் வைக்க இடமில்லை என்றவர்கள், ஜெயலலிதாவுக்கு இடம் ஒதுக்கியது எப்படி...? 
ஓமந்தூரார் படம் வைக்க இடமில்லை என்றவர்கள், ஜெயலலிதாவுக்கு இடம் ஒதுக்கியது எப்படி...? 

மறைந்த முன்னாள் முதல்வரும், ஆட்சியாளர்களுக்கு எடுத்துக்காட்டாய் திகழந்தவ்ருமான ஓமந்தூரார் ராமசாமியின் படம் சட்டசபையில் வைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு, இட வசதி இல்லை என்று காரணம் சொன்ன சட்டசபை அலுவலர்கள், ஜெயலலிதாவுக்கு மட்டும் இடம் ஒதுக்கியது எப்படி என்று ரெட்டி சமூக மக்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். 


முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படம் தமிழகச் சட்டசபையில் அவசரகதியாக திறந்து வைத்துள்ள விவகாரம், தமிழக அரசியலில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. உச்ச நீதிமன்றத்தால் குற்றவாளியாக உறுதி செய்யப்பட்டவரின் படத்தை வைத்ததன் மூலம் தவறான முன்னுதாரணத்தை உருவாக்கி விட்டார்கள் என்று தி.மு.க,பா.ம.க, சி.பி.எம் என எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், தி.மு.கவோ உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது.  

சட்டசபையில் ஜெயலலிதாவின் படம் வைக்கபப்ட்ட விவகாரம் சர்ச்சையைக் கிளப்பிக்கொண்டிருக்கும் நிலையில்தான் நம்மைத்  தொடர்பு கொண்ட, ''சென்னை வாழ் மதுரை-விருதுநகர் மாவட்ட ரெட்டியார் நலச் சங்கத்தின் இணைச்செயலாளர்  வடக்கம்பட்டி ராமசாமி,  ''மறைந்த ஓமந்தூராரின் பெருமைகளைப் பற்றி நான் சொல்லித்தெரிய வேண்டியதில்லை. பொது வாழ்க்கைக்குக்கு வருகிறவர்கள் எப்படி இருக்க  வேண்டுமென்று தன் சொல்லாலும் செயலாலும் வாழ்ந்து காட்டியவர்.  இன்று பலபேரின் பேசு பொருளாக உள்ள  அறநிலையத்துறை என்ற அமைப்பைச் சட்ட ரீதியில் உருவாக்கியவர்.

அவரைப்பற்றி இன்னும் நிறையச் சொல்லலாம். அப்படிப்பட்ட ஓமந்தூரின்  உருவப்படத்தைச் சட்டசபையில் வைக்க வேண்டும் என்று எங்கள் சமூகத்தினர் பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை வைத்து வருகிறோம். டாக்டர் ராமதாசும் வலியுறுத்தி வந்தார். 1990 ல் நான் அனுப்பிய மனுவுக்கு,  ''படம் வைக்க சட்டசபையில் இடம் இல்லை'' என்று பதில் அனுப்பினார்கள். அது சரியான காரணமா என்று தெரியவில்லை.  சமீபத்தில் ஒமந்தூராரின் பிறந்த தினத்தை அரசு விழாவாக அறிவித்து நடத்திய தமிழக அரசு, அவர் படத்தை வைக்கவும் உத்தரவிட வேண்டும்''  என்றார்.