Published:Updated:

மயங்கி விழுந்த டிராபிக் ராமசாமி..! மதுரை மருத்துவமனையில் அனுமதி

செ.சல்மான் பாரிஸ்
மயங்கி விழுந்த டிராபிக் ராமசாமி..! மதுரை மருத்துவமனையில் அனுமதி
மயங்கி விழுந்த டிராபிக் ராமசாமி..! மதுரை மருத்துவமனையில் அனுமதி

மதுரைக்கு வந்திருந்த டிராபிக் ராமசாமிக்கு, திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனியில் சேர்க்கப்பட்டச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மதுரை மீனாட்சியம்மன் கோயில் தீ விபத்து சம்பந்தமாக மதுரை உயர் நீதிமன்றக்கிளையில் வழக்குத் தாக்கல் செய்துள்ள டிராபிக் ராமசாமி, வழக்கு விசாரணைக்காக இன்று மதுரையில் தங்கியிருந்தார். அவர் எந்த ஊருக்கு வந்தாலும் அனுமதியில்லாமல் வைக்கப்பட்ட ப்ளெக்ஸ் பேனர்களை அப்புறப்படுத்த காவல்துறையினரிடம் சொல்வார். அதுபோல் இன்று மதியம் தெற்குமாசி- வடக்கு மாசி வீதி பகுதியில் சென்றபோது, அப்பகுதியில் நடக்கும் பா.ஜ.க பட்ஜெட் விளக்க பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்காக வைக்கப்பட்டிருந்த பிளெக்க்ஸ் போர்டுகளை அகற்ற வேண்டும் என்று அங்கேயே அமர்ந்திருக்கிறார்.

அப்போது திடீரென்று மயங்கி சரிந்துள்ளார். உடனே அங்கிருந்த பொதுமக்கள் அவரை உடனே மீட்டு அருகிலிருந்த தனியார் மருத்துமனையில் சேர்த்தனர். கடுமையான வெயிலால் அவருக்கு ரத்த அழுத்தம் ஏற்பட்டு மயக்கம் அடைந்ததாக சொல்லப்படுகிறது. தற்பொழுது உடல் நலம் பரவாயில்லை, அவருக்கு ஓய்வு தேவை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். தற்போது மருத்துவமனையில் இருந்து வருகிறார்.