Published:Updated:

தமிழச்சிக்கு ஸ்கூட்டர், தமிழனுக்கு குவார்ட்டர்..! குஷ்பு காட்டம்!

தமிழச்சிக்கு ஸ்கூட்டர், தமிழனுக்கு குவார்ட்டர்..! குஷ்பு காட்டம்!
தமிழச்சிக்கு ஸ்கூட்டர், தமிழனுக்கு குவார்ட்டர்..! குஷ்பு காட்டம்!

'டாஸ்மாக்குகள்தோறும் குவார்ட்டர்களைக் குடித்துவிட்டு சாக்கடையில் மல்லாந்துகிடக்கும் கணவர்களைப் பெண்கள் தூக்கி வரவே அவர்களுக்கு ஸ்கூட்டர் தர்றாங்க' என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் குஷ்பு சுந்தர் பேசினார்.


காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, நடிகை குஷ்பு கரூர் வந்தார். அப்போது, மோடியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, பக்கோடா விற்கும் போராட்டத்தில் பங்கேற்றார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ' 
 'ஜெயலலிதா அம்மா முதலமைச்சரா ஆனப்போ, பல நல்ல திட்டங்களைக் கொண்டுவர்றதா சொன்னார். ஆனால், கொண்டுவரலை. அதன்பிறகு, அவர் உடம்புக்கு முடியாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் வெளியில் வந்ததும் நல்ல திட்டங்களை செயல்படுத்துவோம்னு சொன்னாங்க. ஆனால், அவர் மறைந்துவிட்டார். 

அதைதொடர்ந்து, திடீர்னு ஒரு அம்மாவை, இவங்கதான் அடுத்த முதல்வர்னு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்லாம் சொன்னாங்க. திடீர்னு ஜெயலலிதா சமாதியில் தியானம் பண்ணி, பல்டி அடிச்சார் ஓ.பன்னீர்செல்வம்.  ஆளாளுக்கு வேட்டியை கிழிச்சுக்கிட்டாங்க. மக்களுக்கு நல்லது செய்யலை. ஆனால், கொஞ்ச நாள்ல எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஒண்ணா சேர்ந்துக்கிட்டு, நீ முதலமைச்சர்; நான் துணை முதலமைச்சர்னு பாதிபாதியா கொள்ளை அடிக்கத் திட்டம்போட்டாங்க. ஒரு அணி ரெண்டு அணியானது, ரெண்டு அணி மூணாகி, இப்போ நாளாக நிக்குது. ஆட்சியை யார் பிடிக்கிறதுங்கிற சண்டை போடுறதுதான் இவங்க மக்களுக்கு செய்த சாதனை. 

அப்புறம், பழனிசாமி ஆட்சியில் இருந்து செய்த சாதனை, தமிழச்சிகளுக்கு ஸ்கூட்டர், தமிழனுக்கு குவார்ட்டர் என்பதுதான். பெண்களுக்கு எதுக்கு ஸ்கூட்டர்னு கேட்டால், 'டாஸ்மாக்குகள்ல குடித்துவிட்டு, சாக்கடையில படுத்துக் கிடக்கும் கணவன்களைப் பெண்கள், ஸ்கூட்டர் எடுத்துட்டுப் போய் தூக்கிட்டு வரத்தான்னு சொல்றாங்க. முன்னாடி வண்டி வாங்கி அதுல போறவங்களைப் பார்த்து, 'இவங்க வசதியான ஆளுப்பான்னு சொல்வாங்க. இப்போ, பேருந்துகள்ல போறவங்களைப் பார்த்து, இவங்க வசதியானவங்கன்னு சொல்ற அளவுக்கு திடீர்னு பஸ் கட்டணத்தை உயர்த்திட்டாங்க. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்னு இவங்கள்ல யாராவது பஸ்ல போயிருக்காங்களா? அப்பாவி ஜனங்க தினமும் பஸ்ல போக பஸ் கட்டண உயர்வால் படும் அல்லல்கள் அவர்களுக்கு எங்கே புரியும்? இந்த ஆட்சி தமிழர்களுக்கு எதிரான ஆட்சி' என்று தெரிவித்தார்.