Published:Updated:

புகைப்பழக்கத்தை கைவிட வேண்டுகோள் விடுத்த ரஜினிக்கு ராமதாஸ் பாராட்டு

புகைப்பழக்கத்தை கைவிட வேண்டுகோள் விடுத்த ரஜினிக்கு ராமதாஸ் பாராட்டு
புகைப்பழக்கத்தை கைவிட வேண்டுகோள் விடுத்த ரஜினிக்கு ராமதாஸ் பாராட்டு
புகைப்பழக்கத்தை கைவிட வேண்டுகோள் விடுத்த ரஜினிக்கு ராமதாஸ் பாராட்டு

சென்னை: புகைப்பழக்கத்தை கைவிட வேண்டும் என்று தனது ரசிகர்களுக்கு  வேண்டுகோள் விடுத்ததற்காக நடிகர் ரஜினிகாந்திற்கு பாமக நிறுவனர் டாக்ட ராமதாஸ்  பாராட்டு தெரிவித்துள்ளார்.

தனது 63வது பிறந்த நாளையொட்டி கடந்த 12 ஆம் தேதியன்று சென்னை மாவட்ட  ரசிகர் மன்றம் சார்பில் நடைபெற்ற பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்டு பேசிய  ரஜினிகாந்த், தனது உடல் நலம் பாதிக்கப்பட்டது பற்றி குறிப்பிட்டு பேசியபோது,  ரசிகர்களின் பிரார்த்தனையால்தான் தான் சுகமடைந்ததாக கூறினார்.

மேலும் மது மற்றும் புகைப்பழக்கத்தை கைவிட வேண்டும் என்றும் அவர் அப்போது தனது  வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிலையில் ரஜினிகாந்தின் இந்த வேண்டுகோளுக்கு பாமக நிறுவ்னர் டாக்டர் ராமதாஸ்  பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்," 'புகைபிடிக்கும் பழக்கத்தை கைவிட  வேண்டும்' என்று ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் துணிச்சலாக வேண்டுகோள் விடுத்துள்ளதை  மனமார வரவேற்கிறேன். அவரது இந்த முன் உதாரணத்தை  தமிழ்நாட்டின் மற்ற  நடிகர்களும் பின்பற்ற வேண்டும்.

இளைஞர்களின் வாழ்வைச் சீர்ழித்து நாட்டின் எதிர்காலத்தை பாதிக்கும் மதுபான  பழக்கத்திற்கு எதிராக நடிகை, நடிகர்களும் போராட முன் வர வேண்டும். மேலும் நடிகர்  ரஜினி என்றென்றும் நலமோடு இருக்க வாழ்த்துகிறேன்" என்று கூறியுள்ளார்.