Published:Updated:

இலங்கை கடற்படை தாக்குதல் குறைந்துள்ளது: ஜெயலலிதா

இலங்கை கடற்படை தாக்குதல் குறைந்துள்ளது: ஜெயலலிதா
இலங்கை கடற்படை தாக்குதல் குறைந்துள்ளது: ஜெயலலிதா
இலங்கை கடற்படை தாக்குதல் குறைந்துள்ளது: ஜெயலலிதா

சென்னை: தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதல் வெகுவாக  குறைந்துள்ளதாக முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

சென்னையில் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்  துறை கண்காணிப்பாளர்கள் கலந்து கொள்ளும் 3 நாள் மாநாடு இன்று காலை  தொடங்கியது.தமிழகத்தில் நிலவும் மின் வெட்டு பிரச்னை, தண்ணீர் இல்லாததால்  டெல்டா  மாவட்டங்களில் ஏற்பட்டிருக்கும் விவசாய பாதிப்பு, சட்டம் ஒழுங்கு  உள்ளிட்டவை  குறித்து விவாதிப்பதற்கான ஆலோசனைக் கூட்டம்  நடைபெறுகிறது.

மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழக அரசின்  கண்டனத்தை தொடர்ந்து இலங்கை கடற்படையினரின் தமிழக மீனவர்கள் மீதான தாக்குல்  வெகுவாக குறைந்துள்ளதாகவும்,2012 ஆம் ஆண்டில் தமிழக மீனவர் ஒருவர் கூட  இலங்கை படையினரின் தாக்குதலில் உயிரிழக்கவில்லை என்றும் கூறினார்.

சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்பட்ட 4 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான  கிரானைட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும்,கிரானைட் சுரங்க முறைகேட்டில்  ஈடுபட்ட நிறுவனங்களின்  9,753 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள்  முடக்கப்பட்டுள்ளதாகவும் ஜெயலலிதா தனது உரையில் குறிப்பிட்டார்.

மேலும் சூரிய ஒளி மின் உற்பத்தியை மக்கள் இயக்கமாக மாற்ற மாவட்ட  ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் ஜெயலலிதா தெரிவித்தார்.

1.627 நில அபகரிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 835.94 கோடி ரூபாய்  மதிப்பிலான சொத்துக்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

சட்டம் - ஒழுங்கு சிறப்பாக உள்ளது


மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழகத்தில் சட்டம்  - ஒழுங்கு சிறப்பாக உள்ளது என்றும், சாதி மோதல்களை தடுக்க உரிய நடவடிக்கைகள்  எடுக்கப்பட்டு வருவதாகவும் ஜெயலலிதா மேலும் கூறினார்.

ஒரு வாரத்தில் 2 முறை தாக்குதல்

தமிழக மீனவர்கள் மீது கடந்த ஒரு வார காலத்தில் இலங்கை கடற்படையினர் 2 முறை தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.