Published:Updated:

மத்திய அரசு நடத்தும் தேர்வை தமிழக மாணவர்கள் எதிர்கொள்வார்கள்! - செங்கோட்டையன் நம்பிக்கை

தி.ஜெயப்பிரகாஷ்
மத்திய அரசு நடத்தும் தேர்வை தமிழக மாணவர்கள் எதிர்கொள்வார்கள்! - செங்கோட்டையன் நம்பிக்கை
மத்திய அரசு நடத்தும் தேர்வை தமிழக மாணவர்கள் எதிர்கொள்வார்கள்! - செங்கோட்டையன் நம்பிக்கை
மத்திய அரசு நடத்தும் தேர்வை தமிழக மாணவர்கள் எதிர்கொள்வார்கள்! - செங்கோட்டையன் நம்பிக்கை

அரசு மேல்நிலைப் பள்ளி ஆய்வகத் திறப்பு விழா, சிறந்த மாணவர்களுக்கு காமராஜர் விருது வழங்கும் விழா மற்றும் உலகத் தமிழ் நூலகங்களுக்கு நூல்கள் வழங்கும் விழா என திருப்பூர் கே.எஸ்.சி அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று முப்பெரும் விழா நடைபெற்றது. 

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டார். அப்போது, ' மத்திய அரசு கொண்டுவரும் எந்தவொரு தேர்வையும், தமிழக மாணவர்கள் எதிர்கொள்வார்கள் என்ற நிலையை விரைவில் நாம் உருவாக்க இருக்கிறோம். அதற்கான துணிவையும் ஆற்றலையும் தமிழக பள்ளிக் கல்வியின் தேர்வு மையம் நம் மாணவர்களுக்கு வழங்கும். 

தனியார் பள்ளிகளுக்குச் சென்ற மாணவர்கள் எல்லாம் இனி அரசுப் பள்ளிகளுக்குத் திரும்பும் நிலை உருவாகும். படித்துவிட்டு வேலை வேண்டும் என்கிற இன்றைய நிலை மாற்றி எழுதப்பட்டு, பள்ளிப் படிப்பு முடியும்போதே வேலைவாய்ப்பு உத்தரவாதத்தைப் பெற முடியும். தமிழ்வழிக் கல்வியில் படிப்பவர்களை ஊக்குவிக்கும் விதமாக காமராஜர் விருதும், அவர்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்கி அரசு கெளரவிக்கிறது என்றவர், பள்ளிக் கல்வித்துறையின்மூலம் சிறந்த அரசுப் பள்ளி மாணவராகத் தேர்வுசெய்யப்பட்டு, ஜப்பான் செல்ல இருக்கும் கே.எஸ்.சி. பள்ளி மாணவர் சதீஷ் கண்ணனுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.  அடுத்து, தொழில், அறிவியல், கலாசாரம் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளும் பொருட்டு, தமிழகப் பள்ளி மாணவர்கள் 100 பேரைத் தேர்வுசெய்து வெளிநாடுகளுக்கு அனுப்பிவைக்க இருக்கிறோம் என்றும் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்கள் தரப்பில் காவிரி தீர்ப்புகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, காவிரி தீர்ப்பைப்பற்றி முதல்வர் பேசுவார் என்று கூறிவிட்டுக் கிளம்பினார்.