Published:Updated:

``பா.ஜ.கவிற்கு நான் ஃபிட்டாக மாட்டேன்!’’ - மீண்டும் காங்கிரஸுக்குத் திரும்பிய முன்னாள் அமைச்சர்

ச.அ.ராஜ்குமார்

முன்னாள் அமைச்சர் அரவிந்தர் சிங் லவ்லி  பாஜக-விலிருந்து மீண்டும் 9 மாதங்களுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார் 

கடந்த ஆண்டு மே மாதம், காங்கிரஸ் கட்சி தலைமையுடன் ஏற்பட்ட கருது வேறுபாட்டால் அக்கட்சியிலிருந்து விலகி  பாஜகவின் மூத்த தலைவர் அமித் ஷா முன்னிலையில் அக்கட்சியில் சேர்ந்தார். தற்போது மீண்டும் பாஜகவிலிருந்து விலகி தங்கள் கட்சியில் அர்விந்தர் இணைந்து விட்டதாக டெல்லி  காங்கிரஸ் கட்சியின்  தலைவர் அஜய் மகன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்த நகர்வைப் பற்றி பத்திரிக்கையில் சந்திப்பில் பேசிய அவர்," நான் காங்கிரஸ்ஸை  விட்டுச் சென்றது நல்ல முடிவல்ல என்பதை உணர்ந்துள்ளேன். நான் பாஜக-விற்கு ஏற்ற ஆள் இல்லை"என்று கூறியுள்ளார் 

``பா.ஜ.கவிற்கு நான் ஃபிட்டாக மாட்டேன்!’’ - மீண்டும் காங்கிரஸுக்குத் திரும்பிய முன்னாள் அமைச்சர்

இவர் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளது மகிழ்ச்சியாக  உள்ளது என்று காங்கிரஸ் தலைமை கூறியுள்ளது. ஆம் ஆத்மி கட்சியிலுள்ள 20 எம்எல்ஏ க்கள்  தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளதால் இடைத்தேர்தல் வரும் என்று  எதிர்ப்பார்க்கப்படும் நிலையில் அரவிந்தரின் இந்த முடிவு காங்கிரஸ் கட்சிக்கு பலமாக அமையும் என்று  கூறப்படுகிறது.

டெல்லியில் கடந்த முறை ஷீலா தீக்ஷித் தலைமையில்  காங்கிரஸ் ஆட்சி செய்த போது  முக்கிய அமைச்சராக  பதவி வகித்தவர் அரவிந்தர். 1998 ஆம் ஆண்டு முதல் முறை சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்ற இவர், தான் போட்டியிட்ட தேர்தலில் ஒரு முறை கூட தோல்வியுற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது