Published:Updated:

ஜெயலலிதா மாதிரிப் பேசுவேன்!

ஜெயலலிதா மாதிரிப் பேசுவேன்!

ஜெயலலிதா மாதிரிப் பேசுவேன்!

ஜெயலலிதா மாதிரிப் பேசுவேன்!

ஜெயலலிதா மாதிரிப் பேசுவேன்!

Published:Updated:
ஜெயலலிதா மாதிரிப் பேசுவேன்!

திருச்சியில் சமீபத்தில் நடந்த தி.மு.க மகளிர் அணித் தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் தி.மு.க தலைமைக் கழகப் பேச்சாளர் சேலம் சுஜாதா என்பவர், அச்சு அசலாக ஜெயலலிதா போலவே பேசி, சமூக வலைதளங்களில் லைக்ஸ், ஷேர்ஸ் அள்ளினார். அடுத்தடுத்த கூட்டங்களில் கலந்துகொள்வதற்காக சென்னை வந்திருந்த சேலம் சுஜாதாவைச் சந்தித்தேன்.

ஜெயலலிதா மாதிரிப் பேசுவேன்!

‘‘சேலம் பக்கத்துல தம்மம்பட்டிதான் என் ஊரு. பாவாடை தாவணியோட 16 வயசுலேயே காங்கிரஸ் கட்சியில சேர்ந்துட்டேன். காங்கிரஸ் கட்சி ரெண்டா உடைஞ்சப்போ, மூப்பனார் ஐயாவின் தமிழ் மாநில காங்கிரஸில் சேர்ந்தேன். 25 வயசுலேயே எம்.எல்.ஏ ஆகணும்னு ஆர்வம் வந்துச்சு. ஆனா, சீட்டு கேட்டும் கொடுக்காததனால, த.மா.க-வுல இருந்து விலகி, சுயேட்சையா நின்னு 6,000 வாக்குகள் வாங்கித் தோற்றேன். நடிப்புல ஆர்வம் இருந்ததனால, அதுக்கான முயற்சிகளை எடுக்க ஆரம்பிச்சேன். அரசியல்ல இருந்து விலகிட்டேன். ஆனா, கலைஞர் ஐயாவை ஜெயலலிதா கைது பண்ண சமயத்துல மனசு பதறிடுச்சு. கலைஞர் ஐயாவுக்கு நடந்த அந்தக் கொடுமையை தமிழ்நாடே அழுது பார்த்துக்கிட்டு இருந்தப்போதான், உடனடியா தி.மு.க-வுல சேரணும்னு முடிவு எடுத்தேன். ஏன்னா, தனிப்பட்ட முறையில கலைஞர் ஐயாவின் அரசியல் எனக்கு ரொம்பப் பிடிக்கும்’’ என்றபடி ஆரம்பித்தார் சேலம் சுஜாதா.

‘‘அரசியலே கதினு கிடந்ததனால, இன்னும் கல்யாணம் பண்ணிக்கலை தம்பி. கலைஞர் ஐயா முன்னிலையில் தி.மு.க-வுல சேர்ந்த ஆறாவது மாசமே என்னைத் தலைமைக் கழகப் பேச்சாளர் ஆக்கினாங்க. என்னோட 24 வருட அரசியல் வாழ்க்கையில, 15 வருடமா தி.மு.க-வுக்காகப் பேசிக்கிட்டு இருக்கேன். இங்கே வந்ததுக்கு அப்புறம், என்னோட ஆக்டிங் ஆசையும் நிறைவேறிடுச்சு. ‘கோலங்கள்’ சீரியல்ல போலீஸ் கேரக்டர்ல நடிச்சதுதான், நடிகையா என்னோட முதல் அறிமுகம். பிறகு, நிறைய சீரியல்ல போலீஸ் கேரக்டருக்கு என்னைத்தான் கூப்பிடுவாங்க. ‘பாசமலர்’, ‘அரசி’, ‘இதயம்’, ‘கஸ்தூரி’, ‘தியாகம்’, ‘பொன்னூஞ்சல்’, ‘அழகி’னு பல சீரியல்ல நடிச்சிருக்கேன். தவிர, ‘கிழக்கு சந்து கதவு எண் 108’, தங்கர் பச்சான் இயக்கிய ‘களவாடிய பொழுதுகள்’, ‘அல்லிநகரம்’னு சில திரைப்படங்கள்லேயும் தலை காட்டியிருக்கேன். ஏனோ, நான் நடிச்ச படங்கள் எதுவும் ரிலீஸாகலை’’ என்று ஃபீலிங் காட்டியவர், அடுத்த விஷயத்துக்குத் தாவினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஜெயலலிதா மாதிரிப் பேசுவேன்!

‘‘கழகத்துக்காகப் பல மேடைகள்ல பேசியிருந்தாலும், சமீபத்துல ஜெயலலிதா மாதிரி பேசிக் காட்டினதுதான் ரீச் ஆகியிருக்கு. ஏன்னா, முன்னாடியெல்லாம் சமூக வலைதளங்களோட பயன்பாடு அவ்வளவா இல்லை. இப்போ அப்படியா? ஆளாளுக்கு கையில செல்போன் வெச்சிக்கிட்டு, அட்டகாசமான சம்பவங்களைப் பதிவாக்கிடுறாங்க. இதுக்கு முன்னாடியெல்லாம் இத்தனை பாராட்டுகள் எனக்குக் கிடைச்சதில்லை. ஜெயலலிதா மாதிரி மிமிக்ரி பண்ணிப் பேசியதும், ஆளாளுக்கு போன் பண்ணி ‘கலக்கிட்டீங்க’னு வாழ்த்துறாங்க. மேடையிலேயே ஸ்டாலின் சாரும், கனிமொழி அக்காவும் ரசிச்சு சிரிச்சுக்கிட்டு இருந்தாங்க. அது போதும் எனக்கு’’ எனச் சிலாகித்த சுஜாதாவிடம், ‘‘த.மா.க-வுல சீட் கொடுக்காததனால, விலகிட்டேன்னு சொன்னீங்க. தி.மு.க-வுல கொடுத்தாங்களா?” என்றேன்.

ஜெயலலிதா மாதிரிப் பேசுவேன்!

‘‘அதுவேற, இதுவேற தம்பி. இங்கேயும் மூணு தடவை மனு கொடுத்தேன். இப்பவும் கொடுத்திருக்கேன். கல்யாணமே பண்ணிக்காம இத்தனை வருடமா அரசியல்ல இருந்தாலும், தி.மு.க-வுல சீட்டு கொடுக்கலைனு நான் என்னைக்குமே வருத்தப்படலை. ஏன்னா, இங்கே எனக்கு இருக்கிற மரியாதையே ரொம்ப சந்தோஷமா இருக்கு. அதுக்காக, விருப்ப மனு கொடுக்காம இல்லை. வர்ற சட்டமன்றத் தேர்தல்ல போட்டியிடுறதுக்கும் விருப்ப மனு கொடுத்திருக்கேன். கிடைச்சா சந்தோஷம்தான்... இல்லைனா, தி.மு.க-வின் வளர்ச்சிக்காகப் பாடுபடுவேன். இப்போதைக்கு என்னோட ஒரே இலக்கு தி.மு.க ஜெயிக்கணும். மீண்டும் ஆட்சியைப் பிடிக்கணும்’’ என்று முடித்தவர்,

‘‘முக்கியமா ஒண்ணு சொல்ல மறந்துட்டேன். முன்ன மாதிரி இல்லை... எல்லோருமே டிஜிட்டல் யுகத்துக்கு மாறிட்டதனால, நானும் ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்-அப்ல பயங்கர ஆக்டிவா இருக்கேன். ஃபேஸ்புக்ல 5,000 பேரைச் சேர்த்துக்கலாம்ல? எனக்கு 4,990 நண்பர்கள் இருக்காங்க. இன்னும் பல ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட் பெண்டிங்ல இருக்கு. ஆனா, முக்கியமான ஆட்களைச் சேர்த்துக்கிறதுக்காக பத்து பேரோட நட்புக் கோரிக்கையை ஏற்காம இருக்கேன்!’’ என்றார் சேலம் சுஜாதா!

- கே.ஜி.மணிகண்டன், படங்கள்: பா.காளிமுத்து