Published:Updated:

சத்தியமா நான் தி.மு.க. கிடையாது!

சத்தியமா நான் தி.மு.க. கிடையாது!

சத்தியமா நான் தி.மு.க. கிடையாது!

சத்தியமா நான் தி.மு.க. கிடையாது!

சத்தியமா நான் தி.மு.க. கிடையாது!

Published:Updated:
சத்தியமா நான் தி.மு.க. கிடையாது!

துபாயில் நடந்த நட்சத்திர பேட்மின்ட்டன் போட்டியில் வியர்க்க விறுவிறுக்க ஃபால்கான் ஃபயர்ஸ் அணிக்காக ஆடிய நடிகர் பிரேமைச் சந்தித்தேன்.

சத்தியமா நான் தி.மு.க. கிடையாது!

‘‘பேட்மின்ட்டனுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்?’’

‘‘எனக்கு அடிப்படையில் ஸ்போர்ட்ஸ் ஆர்வம் அதிகம். செலிபிரிட்டி கிரிக்கெட்டில் இரண்டு சீசன் விளையாடியிருக்கேன். அதே மாதிரி பேட்மின்ட்டனும் நல்லாவே ஆடுவேன். செலிபிரிட்டி பேட்மின்ட்டன் லீக் துபாயில் நடக்கிறதா அறிவிச்சதும் செம குஷியாகிட்டேன். மொத்தம் நாலு டீம். ‘ஜெயம்’ ரவி ஃபால்கான் ஃ பயர்ஸ் டீம் கேப்டன். மீனா நேச்சுரல் பீகாக் டீம் கேப்டன். அருண் விஜய் சென்னை ஈகிள்ஸ் கேப்டன்.  பரத் சி.ஆர்.வி பெலிகான்ஸ் டீம் கேப்டன். நானும் ‘ஜெயம்’ ரவியும் ஒரே டீம். ஃபைனல்ல அருண் விஜய் டீமோடு மோதி பெஸ்ட் ஆஃப் ஃபைவ்ல தோற்றோம்.’’

‘‘நீங்க சீரியல்லதானே ரொம்ப ஃபேமஸ். அந்தப் பக்கமே உங்களைக் காணோமே?’’

‘‘நான் கடைசியா நடிச்ச சீரியல் ‘அண்ணாமலை’ என் நடிப்பைப் பார்த்து கலைஞர் ஐயா ‘கண்ணம்மா’ பட வாய்ப்புக் கொடுத்தார். இனிமே சினிமா மட்டும்தான்னு அப்போ முடிவு பண்ணினேன். ஏன்னா ஒரே நேரத்துல இரண்டிலேயும் கவனம் செலுத்த முடியாது பாருங்க. அடுத்து ‘தனம்’ படத்தில் ஹீரோ வாய்ப்பு. இதுக்கு நடுவுல இயக்குநர் பி.எம்.கிரிராஜ் கன்னடத்தில் ‘ஜெட்டா’னு ஒரு படம் எடுத்தார். ரெண்டு ஹீரோ சப்ஜெக்ட். அதில் நானும் ஒரு ஹீரோவா நடிச்சேன். இன்னொருத்தர் கிஷோர் சார். படம் செம ஹிட்டாச்சு. ஸ்டேட் அவார்டும்  வாங்குச்சு. எனக்கு தமிழ் சினிமாவில் பெரிய ஸ்டாரா வரணும். அதுக்காக இங்கேயே தொடர்ந்து வெயிட் பண்ணிக்கிட்டிருக்கேன்.’’

‘‘கலைஞர் மூலமா ஹீரோவான நீங்க இந்தத் தேர்தலில் தி.மு.க பிரசாரத்துக்குப் போவீங்களா?’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சத்தியமா நான் தி.மு.க. கிடையாது!

‘‘ஏன் பாஸ் இப்படிக் கோத்துவிடுறீங்க? ஒருநாள் ரோட்டில் போகும்போது எதிர்ல வந்த ஒருத்தர் ‘என்ன உங்க கட்சி மீட்டிங் நடக்குது. நீங்க போகலையா?’னு கேட்டார். ‘எந்த மீட்டிங், எந்தக் கட்சி, நான் ஏன் போகணும்?’னு கேட்டேன். ‘தி.மு.க மீட்டிங்’னு சொல்றார். அதே மாதிரி அ.தி.மு.க நண்பர் ஒருத்தர் வீட்ல விசேஷம் என்னைக் கூப்பிடவே இல்லை. அவரெல்லாம் வர மாட்டாருப்பானு அவங்களே நினைச்சிக்கிட்டாங்க. எல்லோருக்கும் ஒண்ணு சொல்லிக்கிறேன். நான் எந்தக் கட்சியும் கிடையாது. எனக்கு எல்லோருமே வேணும். மற்றபடி கலைஞர் ஐயாவை ரொம்பப் பிடிக்கும். அவ்வளவுதான்.’’

‘‘இப்போ என்ன படங்கள் பண்றீங்க?’’

‘‘சூர்யாவுடன் ‘சிங்கம் 3’, பிரபு சாலமன், தனுஷுடன் இணையும் படம். கெளதம் மேனன் சார் பேனர்ல ஜெய் ஹீரோவா நடிக்கும் ‘தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும்’னு மூன்று படங்கள் பண்ணிக்கிட்டிருக்கேன். ஜெய்யுடன் நடிக்கும் படத்தில் வித்தியாசமான வில்லன் கேரக்டர். சீரியல் மூலமா எனக்கு இருந்த ஒரு சாஃப்டான இமேஜ் இந்தப் படம் வந்தா காலியாகிடும். ஏற்கெனவே ‘வல்லக்கோட்டை’, ‘பிரியாணி’யில் வில்லனா பண்ணிருக்கேன். அந்த வரிசையில் வில்லனா இது எனக்கு மூணாவது படம். ஒரு குறிப்பிட்ட இமேஜ்ல மாட்டிக்க விரும்பலை. எல்லாவிதமான கேரக்டர்களும் பண்ணணும். அதுதான் என் ஆசை.’’

-ஜுல்ஃபி, படங்கள்: தி.ஹரிஹரன்