Published:Updated:

சரத்குமார் மோசடி செஞ்சார்!

சரத்குமார் மோசடி செஞ்சார்!

சரத்குமார் மோசடி செஞ்சார்!

சரத்குமார் மோசடி செஞ்சார்!

சரத்குமார் மோசடி செஞ்சார்!

Published:Updated:
சரத்குமார் மோசடி செஞ்சார்!

ரசியல், சினிமா என செல்லும் இடமெல்லாம் சரத்குமாரை ஊறவைத்து அடிக்கிறார்கள். கொஞ்ச காலம் பரபரப்பாக இருந்த நடிகர் சங்கப் பிரச்னை இப்போது அடுத்த கட்டத்துக்கு நகர்ந்திருக்கிறது. சரத்குமார் மீது ஊழல், கையாடல், கூட்டுச்சதி என ஏகப்பட்ட புகார்களை அடுக்கியிருக்கிறது தென்னிந்திய நடிகர் சங்கம்.  சங்கத்தின் சார்பாக சரத்குமார் மீதான இந்தப் புகாரை முன்னெடுத்தவர், தி.மு.க தலைமை நிலையச் செயலாளரான பூச்சி முருகன்.அவரிடம் பேசியதில்...

சரத்குமார் மோசடி செஞ்சார்!

‘‘தெரியாமத்தான் கேட்கிறேன். நாலு மாசத்துக்கு முன்னாடியே புது நிர்வாகிகள் பதவிக்கு வந்துட்டாங்க. என்ன பண்ணணும்? தான் தலைவர் பொறுப்புல இருந்தப்போ, இருந்த கணக்கு வழக்குகளை நேர்மையா ஒப்படைச்சுட்டுப் போயிருக்கணும். சரத்குமார் அதைச் செய்யலை. கொஞ்சம் பொறுத்துப் பார்த்து, இது சம்பந்தமா பேசி, கடிதம் போடலாம்னு முடிவெடுத்தோம். ஒண்ணல்ல, ரெண்டல்ல... ஆறேழு கடிதங்களுக்குப் பிறகு, அவர்கிட்ட இருந்து ஒரு கணக்கு வந்தது. அதை ஆடிட்டிங் பண்ணிப் பார்த்தப்போ ஏகப்பட்ட குளறுபடி! சரத்குமார் கொடுத்த கணக்கை பொதுவான ஒரு ஆடிட்டர்கிட்ட கொடுத்து செக் பண்ணிப் பார்த்தோம். அவர் ரெடி பண்ண 200 பக்க கணக்கின் மூலமா சரத்குமார் கையாடல் செஞ்சது உறுதியாச்சு.

ஆடிட்டிங் ரிப்போர்ட்படி, 1 கோடியே 65 லட்சம் ரூபாய் கையாடல் பண்ணியிருக்கு சரத் அண்ட் கோ. இதெல்லாம் யாரு பணம்? சோத்துக்கே வழியில்லாம கஷ்டப்படுற பல துணை நடிகர்களுக்குப் போய்ச் சேர வேண்டிய பணம்!’’ சூடானார் பூச்சி முருகன்.

‘‘புகாரை நீங்க கொடுத்தது, அரசியல் உள்நோக்கம்னு சொல்றாங்களே?”

‘‘நாசர், விஷால், கார்த்தினு சங்கத்துல முக்கியமான பொறுப்புல இருக்கிறவங்க கையெழுத்து போட்டுக்கொடுத்த புகார் அது. நடிகர் சங்கத்துல நானும் ஒரு ட்ரஸ்டி. அதனால, என் மூலமா புகார் போச்சு. தவிர, புகார் கொடுத்தப்போ நான் நிருபர்கள்கிட்டகூட பேசலை. விறுவிறுனு கிளம்பி வீட்டுக்கு வந்துட்டேன். கொஞ்ச நேரம் கழிச்சு, ‘பூச்சி முருகனால் எனக்கு அவமானம், அசிங்கம். இது பொய்யான புகார்’னு என் மேல ஒரு புகாரைக் கொடுத்திருக்கார் சரத்குமார். பொய்யான வழக்குனா, தைரியமா கோர்ட்டுல நிரூபிச்சுக்க வேண்டியதுதானே?’’

‘‘நடிகர் சங்கத்துல அரசியலைப் புகுத்துறது ஆரோக்கியமான விஷயமா இருக்குமா?”

‘‘அட... யாருமே அரசியலைப் புகுத்தலைங்க. 2010-ல இருந்து சங்கத்தோட இடப் பிரச்னை, கட்டடப் பிரச்னைக்காகப் போராடிக்கிட்டு இருக்கேன். சரத்குமார் தலைமையில் சங்கம் இருந்தவரை ஒண்ணுமே நடக்கலை. புதுசா வந்திருக்கிற நாசர், விஷால், கார்த்தி சூப்பரா வேலை பார்க்கிறாங்க. பிரச்னையா இருந்த இடத்தை மீட்டு எடுத்தாச்சு. கூடிய சீக்கிரமே நிதி திரட்டி, கட்டடம் கட்டிடுவோம். இந்த முயற்சியில நான் மட்டுமில்லை, அ.தி.மு.க, பா.ம.க, தே.மு.தி.க, பா.ஜ.க-வைச் சேர்ந்த நடிகர்களோட பங்களிப்பும் நிறையவே இருக்கு. நாங்க புகார் கொடுத்திருக்கிற முன்னாள் நிர்வாகிகள்ல தி.மு.க-வைச் சேர்ந்தவர் ஒருத்தரும் இருக்காருன்னா, சங்கத்துல எப்படிக் குறிப்பிட்ட கட்சிரீதியான செயல்பாடு இருக்கும்? தவிர, இந்தப் பிரச்னையில் ஆரம்பத்துல இருந்தே நான்தான் ஆர்வமா முன்னெடுத்துக்கிட்டு இருந்தேன். அதனாலதான், என்கிட்ட கொடுத்து புகார் கொடுக்கச் சொல்லியிருக்காங்க. இதுதான் உண்மை.’’

‘‘அதனாலதான், சரத்குமாருக்கும் உங்களுக்கும் பிரச்னையா?”

‘‘அவர் கிழக்கே பார்த்து பேசச்சொன்னா, மேற்கே பார்த்துக் கதை சொல்ற ஆளு. அவரை அவமானப்படுத்துற, அலைச்சலைக் கொடுக்கிற வேலையெல்லாம் எனக்குக் கிடையாது. ஏன்னா, எனக்கே ஆயிரெத்தெட்டு வேலை இருக்கு. தவிர, அவரைப் பத்திதான் தமிழ்நாட்டுக்கே தெரியுமே? பல பேர்கிட்ட பணம் வாங்கி, திருப்பிக் கொடுக்காம இருந்திருக்கார். அவர் பேர்ல செக் மோசடி இருக்கு. சமீபத்துலகூட  வாங்கின கடனைத் திருப்பித் தர முடியாம, தன் நிலத்தை அடமானமா கொடுத்தாரே... ஒரு பொய்யை ரொம்பத் திறமையா சொல்வார். அதுதான், இப்போ அவருக்கு ஆபத்தா முடியப்போகுது.’’

‘‘கட்டடம் கட்டுறதுக்காக நிறைய நடிகர்கள் சேர்ந்து ஒரு படம் நடிக்கிறதா இருந்துச்சே, என்னாச்சு?”

‘‘அந்த பிளானும் இருக்கு. அதுக்கு முன்னாடி, பெரும்பாலான நடிகர்கள் பங்குபெறும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்த முடிவு செஞ்சிருக்கோம். அதுக்கு நல்ல வரவேற்பும், ஏராளமான நிதியும் கிடைக்கும்னு நம்புறோம்.’’

‘‘குமரிமுத்துவின் இழப்பு, தி.மு.க-வை எந்த அளவுக்குப் பாதிச்சிருக்கு?”

‘‘ரொம்பவே! அவர் நல்ல நடிகர்ங்கிறதைவிட, நல்ல மனிதர். நடிகர் சங்கத்துல ஒரு பிரச்னைனு தெரிஞ்சதும், முதல் ஆளா குரல் கொடுத்தவர். அவரோட மருத்துவமனை செலவை தி.மு.க ஏற்றுக்கொண்டது. நடிகர்கள் விஷால், கார்த்தி, நாசர் எல்லாம் பெர்சனலா நிறைய உதவிகள் செஞ்சிருக்காங்க. ஆற்றல்மிக்க தொண்டரை, பேச்சாளரை தி.மு.க இழந்திருச்சு.’’

‘‘நீங்க நடிகர். ஆனா, விரல்விட்டு எண்ணுற அளவுக்குதான் நடிச்சிருக்கீங்க. ஏன்?”

‘‘ ‘தெனாலிராமன்’, ‘எலி’, ‘நான் பேச நினைப்பதெல்லாம்’, ‘ரஜினிமுருகன்’னு இதுவரை பத்து படத்துல நடிச்சிருப்பேன். சங்கப் பணிகள், கட்சிப் பணிகள்ல பிஸியா இருக்கிறதனால, ரொம்ப நெருக்கமான நண்பர்கள் கூப்பிட்டா மட்டும்தான் நடிக்கிறேன்.’’

‘‘சரி... ‘பூச்சி’னா என்ன?”

‘‘பழம்பெரும் நடிகர் ‘கலைமாமணி’ எஸ்.எஸ்.சிவசூரியன் எங்க அப்பா. 1932-ல இருந்து 1940 வரை எம்.ஜி.ஆர்., சிவாஜி னு பல முன்னணி நடிகர்களோட சேர்ந்து 150 படங்களுக்கும் மேலே நடிச்சுருக்கார். எனக்கும் சின்ன வயசுலேயே நடிப்புல ஆர்வம். ஒரு நாடகத்துல நடிக்கும்போது, மற்றொரு பழம்பெரும் நடிகர் அசோகன்தான் எனக்குப் ‘பூச்சி’ங்கிற பேரு வெச்சார். இப்போ கெஜட்லேயே என் பேரு பூச்சிமுருகன்தான்!’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- கே.ஜி.மணிகண்டன், படம்: மீ.நிவேதன்