Published:Updated:

விஜயகாந்த் ஒரு காமெடியன்!

விஜயகாந்த் ஒரு காமெடியன்!

விஜயகாந்த் ஒரு காமெடியன்!

விஜயகாந்த் ஒரு காமெடியன்!

விஜயகாந்த் ஒரு காமெடியன்!

Published:Updated:
விஜயகாந்த் ஒரு காமெடியன்!

‘‘ஈரோடு, கரூர், தேனி, சாத்தூர், கன்னியாகுமரி, நெல்லைனு இந்த ஒரு மாசத்துல மட்டும் பல கட்சி மீட்டிங்ல பேசியிருக்கேன். கிடைக்கிற கேப்புல சினிமாவுலேயும் நடிச்சுக்கிட்டுதான் இருக்கேன்!’’ எப்போதும் எனர்ஜியாக இருக்கும் சிங்கமுத்துவிடம் சில புல்லட் கேள்விகள்.

விஜயகாந்த் ஒரு காமெடியன்!

‘‘பேச்சாளர்களோட உடல் மொழியும், குரலும்தான் ஒரு கட்சிக்கு மிகப்பெரிய பலம். ஆனா, பேச்சாளர்களுக்கான அங்கீகாரம் சரியா கிடைக்குதா?”

‘‘எதையும் எதிர்பார்த்து வேலை செய்யணும்னா, கட்சியில இருக்க முடியாது தம்பி. கடமையை மட்டும்தான் செய்யணும். மேடைகளில் பேச வேண்டியது பேச்சாளர்களோட கடமை. அதுக்கான அங்கீகாரத்தைக் கட்சிதான் முடிவு பண்ணும்.’’

‘‘இந்தத் தேர்தலுக்கு எத்தனை கூட்டத்தில் பேசணும்னு கணக்கு வெச்சிருக்கீங்க?”

‘‘எந்தெந்த தேதியில், எங்கெங்கே பேசணும்னு தலைமைக்கழகத்தில் இருந்து அறிவிப்பு வரும். எத்தனைக் கூட்டங்கள் ஒதுக்குறாங்களோ, அதுல சிறப்பா செயல்படணும். அதுதான் நம்ம டார்கெட். அ.தி.மு.க-வுக்கும் மத்த கட்சிகளுக்கும் உள்ள வேறுபாடு, நாங்க செஞ்ச கெத்தான விஷயங்களைப் பேசுவேன். இடையிடையே மத்த கட்சியில இருக்கிறவங்களைக் கலாய்ச்சுக்கிட்டே, நம்ம கொள்கைகளையும் சொல்லிடுவேன்.’’

‘‘நடிகர் சங்கத் தேர்தலில் எதிரெதிரா இருந்த விஷாலும், ராதாரவியும் இப்போ சேர்ந்து நடிக்கிறாங்க. அதே மாதிரி, வடிவேலும் நீங்களும் மறுபடியும் சேர்ந்து நடிப்பீங்களா?”

‘‘அவருக்குத்தான் படமே இல்லையே, அப்புறம் எங்கே சேர்ந்து நடிக்கிறது? ஒரு சின்ன எடுத்துக்காட்டு சொல்றேன். தி.மு.க ஒரு கட்சி. அ.தி.மு.க பெரிய கட்சி. அவர் கலைஞரை நம்பிப் போனார். அதுக்கப்புறம் எல்லாமே தோல்விதான். நான் அம்மாவை நம்பிப் போனேன். எனக்குப் போன இடமெல்லாம் வெற்றி. அதனால, அவர் வெறும் நடிகரா மட்டுமே என்னைப் பகைச்சுக்கிட்டிருந்தா, கண்டிப்பா நடிச்சிருப்பேன். நான் ‘அ.தி.மு.க-வின் சிறந்த பேச்சாளர்’னு அம்மா சொல்லியிருக்காங்க. அப்படி இருக்கும்போது, எப்படி தம்பி நடிப்பேன்?’’

‘‘வடிவேலுகிட்ட இருந்து விலகி வந்ததுக்கு அப்புறம் உங்களுக்கு வாய்ப்புகள் அதிகமாயிருக்கா?”

‘‘1972-ல நான் அ.தி.மு.க-வுல உறுப்பினர். ஒரு நடிகர் அரசியலுக்கு வந்தா, அவங்களோட படங்கள் வெளிவர்றதுல பிரச்னை வருதுனு கண்கூடாப் பார்க்கிறோம். ஆனா, எனக்குத் தினம் தினம் பட வாய்ப்புகள் வந்துக்கிட்டேதான் இருக்கு. ஏன்னா, அரசியல்ல இருந்தாலும் சினிமாவுக்கு, சினிமாவுல இருக்கிறவங்களுக்கு உதவிகரமா இருந்தேன். அதுக்கு சில சிக்கல்கள் இருந்தன. இப்போ அது இல்லைங்கிறது ப்ளஸ்தானே?’’

‘‘அ.தி.மு.க-வின் ஸ்டிக்கர் அட்ராசிட்டியை இணையத்துல அதிகமா கலாய்க்கிறாங்களே?”

‘‘ஒரு நலத்திட்டம் செய்யும்போது, அதை யாரு செஞ்சாங்கனு தெரிய வேணாமா தம்பி? அதுக்காகப் படங்கள் ஒட்டியிருப்பாங்க. ஆனா, தொண்டர்களோ, எம்.எல்.ஏ-க்களோ நற்பணி செய்யும்போதும் ஒட்டுறதா சொல்றாங்க. அதை நான் பார்த்ததில்லை. இலவசப் பொருட்களை மக்கள் வீட்டுல வெச்சிக்கிறாங்க. அது அ.தி.மு.க கொடுத்ததா, தி.மு.க கொடுத்ததானு தெரியணும்ல? அதுக்காகக்கூட ஒட்டியிருக்கலாம்.’’

‘‘ஒரு நடிகரா, விஜயகாந்தின் அரசியல் செயல்பாடுகளை எப்படிப் பார்க்கிறீங்க?”

‘‘விஜயகாந்த், நடிக்கும்போது ஒரு நல்ல ஹீரோ. ஆனா, அரசியல்ல ஒரு காமெடியன். அவர் காமெடி பண்றதைப் பார்க்க வர்ற மக்களை அவரோட ரசிகர்கள்னு தப்பா நினைச்சுக்கிட்டு இருக்கார். என்னத்த சொல்றது தம்பி?’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விஜயகாந்த் ஒரு காமெடியன்!

‘‘பத்து வருடம் முன்னாடி உங்க மகனை ஹீரோவா அறிமுகப்படுத்துனீங்க. அப்புறம் என்னாச்சு?”

‘‘பையன் படிக்கணும்னு ஆசைப்பட்டான். அதனால கொஞ்சம் இடைவெளி ஆயிடுச்சு. இப்போ, ‘கட்டழகன்’னு ஒரு படத்துல நடிக்கிறான். அந்தப் படம் ரிலீஸ் ஆகும்போது, அவனுக்குக் கல்யாணமும் செஞ்சு அழகு பார்த்துடலாம்னு ஆசைப்படுறேன்.’’

‘‘திரைப்பட விருதுகள் என்னாச்சு?”

‘‘ஏழை மக்களோட வாக்குறுதிகளை நிறைவேத்துறதுல அம்மா கவனமா இருக்காங்க. அதனால, கொஞ்சம் தாமதமாகியிருக்கும். அதனாலென்ன? அடுத்தும் நம்ம ஆட்சிதான். அடுத்த வருடம் சிறப்பா செய்வாங்க.’’

‘‘உங்க சினிமா கேரியர்?”

‘‘சூப்பரா போய்க்கிட்டு இருக்கே! ‘இங்கிலீஷ் படம்’, ‘அட்றா மச்சான் விசிலு’, ‘முத்துராமலிங்கம்’, ‘நாலுபேரு நாலுவிதமா பேசுவாங்க’ அப்புறம் தனுஷ்கூட ‘கொடி’னு பல படங்கள் அடுத்தடுத்து ரிலீஸுக்கு ரெடியா இருக்கு. சினிமாவும், அரசியலும் நமக்கு ரெண்டு கண்ணு தம்பி... ரெண்டையும் விட்டுவிட மாட்டேன்!’’

- பி.எஸ்.முத்து