Published:Updated:

அன்புமணியின் முன்னாள் சிறப்பு அதிகாரி வீட்டில் சிபிஐ சோதனை

விகடன் விமர்சனக்குழு

சென்னை, பிப். 21,2011

முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸிடம் சிறப்பு அதிகாரியாக இருந்த டி.எஸ்.மூர்த்தி (வயது 65) என்பவரது வீட்டில் சிபிஐ அதிகாரிகள் இன்று திடீர் சோதனை நடத்தினர். ##~~##

இந்தூரில் மருத்துவக் கல்லூரி தொடங்க அனுமதி கொடுத்ததில் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

இந்தூரில் உள்ள மருத்துவ கல்லூரி ஒன்றில் அனுமதி அளிக்கப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக, கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு புதுடெல்லியில் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

இதன் தொடர்ச்சியாக, முன்னாள் உளவுப் பிரிவு அதிகாரியான மூர்த்தி தனது பணி ஓய்வுக்குப் பிறகு அமெரிக்க சென்றதால், சென்னை - சேத்துப்பட்டில் உள்ள அவரது வீட்டை ஒரு மாதங்களுக்கு முன்பு சிபிஐ அதிகாரிகள் பூட்டினர்.

இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து இன்று மூர்த்தி இன்று வீடு திரும்பியதைத் தொடர்ந்து, அவரது வீட்டுக்கு விரைந்த சிபிஐ-யின் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

மூர்த்தியின் வீட்டில் இருந்து ஆவணங்கள் ஏதேனும் பறிமுதல் செய்யப்பட்டதா என்ற விவரத்தை சிபிஐ அதிகாரிகள் வெளியிடவில்லை.

எனினும், இந்த முறைகேடு தொடர்பாக முக்கிய ஆதாரங்களை அவர்கள் கைப்பற்றியதாக தெரிகிறது.