Published:Updated:

''மோடி ஒன்றும் பீடா விற்பவர் அல்ல..!'' - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிரடி

'தமிழக அரசுக்கு ஆலோசனை வழங்காமல் இருக்க மோடி ஒன்றும் பீடா விற்பவர் அல்ல, நாட்டின் பிரதமர்' என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியது அ.தி.மு.க-வினர் மட்டுமல்லாமல், பி.ஜே.பி-யினரின் கவனத்திற்குச் சென்றுள்ளது. தினமும் யாரைப்பற்றியாவது ஏடாகூடமாகப் பேசுவதை வாடிக்கையாக்கிவருகிறார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. நேற்று, 'கமல் ராமேஸ்வரத்தில் தொடங்கும்  கட்சி, கடலில் மூழ்காமல் இருந்தால் சரி' என்று பேசியவர், இன்று (19-02-18) இப்படிப் பேசியுள்ளார்.

ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவை சிறப்பாக நடத்துவது பற்றி சிவகாசியில்  நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியவர்,  'கமல்ஹாசன் யாரை எதிர்த்து அரசியலில் ஈடுபடுகிறார் என்பதே தெரியவில்லை. ரஜினி அரசியலில் ஈடுபடுவதைவிட எப்போதும் போல சினிமாவில் நடிப்பதே அவருக்கு நல்லது. ரஜினி, கமல் கட்சி ஆரம்பிப்பதால், அ.தி.மு.க-விற்கு ஒரு சதவிகிதம்கூட பாதிப்பில்லை' என்றவர், தமிழக அரசுக்கு மோடி ஆலோசனை சொல்கிறார் என்கிறார்கள். தமிழக அரசுக்கு ஆலோசனை வழங்காமல் இருக்க மோடி ஒன்றும் பீடா விற்பவர் அல்ல, நாட்டின் பிரதமர். அதனால் சொல்கிறார்' என்று பேசினார். இது, வந்திருந்த கட்சியினர் மத்தியில் சலசலப்பை உண்டாக்கியது.

அடுத்த கட்டுரைக்கு